தென்னாபிரிக்கா- மேற்கிந்தித்தீவுகள் போட்டி கைவிடப்பட்டது!

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையின் காரணமாக கைவிடப்பட்டது.

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் 15வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்றது.

இதில் ரொஸ் வென்ற மேற்கிந்தியத்தீவுகள் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆட ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி 7.3 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்களை இழந்து 29 ரன்களை எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது.

தொடர்ந்து மழை பெய்ததால் போட்டியை தொட முடியவில்லை. ஆட்டம் கைவிடப்பட்டு இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here