ஊழல் குற்றச்சாட்டில் பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி கைது!

போலி வங்கி கணக்குகள் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி சர்தாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

போலி வங்கி கணக்குகளை தொடங்கி அதில் பணத்தை சேர்த்து, வெளிநாட்டுக்கு அனுப்பிய முறைகேடு தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி சர்தாரி மற்றும் அவருடைய சகோதரி பர்யால் தால்பூருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்நாட்டு ஊழல் தடுப்பு பிரிவு விசாரணையை தீவிரப்படுத்தியதற்கு இடையே பிணை கோரி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் சர்தாரி.

ஆனால் அவரது கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்து விட்டது. இதனையடுத்து சர்தாரியை ஊழல் தடுப்பு பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஆனால் அவருடைய சகோதரியை இன்னும் கைது செய்யவில்லை. இதுதொடர்பாக முழுமையான விசாரணை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அவரது கைதிற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here