பிரபல நகைச்சுவை நாடக நடிகர் கிரேசி மோகன் காலமானார்

பிரபல நகைச்சுவை நாடக நடிகரும், புகழ்பெற்ற வசனகர்த்தாவுமான கிரேசி மோகன் காலமானார்.

பிரபல நகைச்சுவை நாடக நடிகர் கிரேசி மோகன் (67). புகழ் பெற்ற வசனகர்த்தாவான இவர் நாடக ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் 3 வேடங்கள் ஏற்று நடித்த அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்திற்கு வசனம் எழுதினார். இந்த படம் நல்ல வரவேற்பினை பெற்றது. தொடர்ந்து அவர் மைக்கேல் மதன காமராசன், ஆஹா, காதலா காதலா, பஞ்சதந்திரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட படங்களுக்கு கதை, வசனம் எழுதியுள்ளார்.

இவர் பணியாற்றிய படங்களில் நகைச்சுவை அதிகம் இருக்கும் வகையில் எழுதுவதில் சிறப்பு பெற்றவர்.

இந்த நிலையில், நடிகர் கிரேசி மோகன் உடல் நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அவரது நிலைமை கவலைக்கிடம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் 2 மணியளவில் அவருடைய உயிர்பிரிந்தது. இது திரையுலகினருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here