நான் தலைவராகுவது நல்லதென ரஜினி சொன்னார்!

நடிகர் சங்கத்தின் தலைவராக பாக்கியராஜ் இருந்தால் நன்றாக இருக்குமென, ரஜினி கூறியதாக இன்று பகிரங்கமாக அறிவித்துள்ளார் பாக்கியராஜ்.

நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த பின் நடிகர் பாக்யராஜ் செய்தியாளர்களிடம் இதனை கூறினார்.

“நாசர் தலைமையிலான பாண்டவர் அணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

சவுகிதார் எனக்கூறி மோடி தேர்தலை சந்தித்தது போல நாங்களும் நடிகர் சங்கத்தை பாதுகாக்க வந்துள்ளோம். நடிகர் சங்க தேர்தலில் எங்கள் (பாக்யராஜ்) அணிக்கு சுவாமி சங்கரதாஸ் அணி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

நடிகர் சங்கத்தை உருவாக்கியவர் சுவாமி சங்கரதாஸ் என்பதால் அணிக்கு அவர் பெயர் வைத்துள்ளோம். நடிகர் சங்க தேர்தலில் பொருளாளர் பதவிக்கு நடிகர் கார்த்தியை எதிர்த்து நடிகர் பிரசாந்த் போட்டியிடுகிறார்.

நடிகர் சங்க கட்டட பணிக்கு நிதி தேவைப்படுகிறது. இவர்களிடம் என்ன திட்டம் உள்ளது. நடிகர் சங்க கட்டட பணி விரைந்து முடிய வேண்டும் என்பதே ரஜினி, கமலின் விருப்பம்.

நடிகர் சங்க கட்டட பணியில் தொய்வு ஏற்பட்ட போதெல்லாம் ஐசரி கணேஷ் பண உதவி செய்துள்ளார். நான் தலைவரானால் நன்றாக இருக்கும் என்று ரஜினி சொன்னார். நடிகர் சங்க தேர்தலில் சவுகிதாராக களமிறங்குகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி- சுவாமி சங்கரதாஸ் அணி இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here