இந்தவார ராசி பலன்கள் (9.6.2019- 15.6.2019)

சுக்கிரன், ராகு, செவ்வாய், சந்திரனால் அளப்பரிய நன்மை உண்டாகும். தெய்வ நம்பிக்கை மனதில் புத்துணர்வை ஏற்படுத்தும். திட்டமிட்ட செயல்கள் சிறப்பாக அமையும்.

வாகனப்பயணம் அளவுடன் மேற்கொள்வீர்கள். தாயின் அன்பும், ஆசியும் கிடைக்கும். புத்திரரின் மனக்குறையை அறிந்து சரி செய்வீர்கள். விலகிய உறவினர் சொந்தம் பாராட்டுவர். குடும்ப செலவுக்கான பணத்தேவை அதிகரிக்கும். மனைவியின் கருத்துக்கு முக்கியத்துவம் தருவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிக உழைப்பால் சீராகும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்றவும். பெண்கள் தாய்வீட்டு உதவியை கேட்டுப் பெறுவர். மாணவர்கள் படிப்பில் கூடுதல் அக்கறை கொள்வர்.
சந்திராஷ்டமம்: 15.6.19 அதிகாலை 5:16 மணி – நாள் முழுவதும்.
பரிகாரம்: சிவன் வழிபாடு நன்மை தரும்.

சுக்கிரன், குரு, சந்திரன் அனுகூல அமர்வில் உள்ளனர். தாமதமான பணிகள் ஒவ்வொன்றாக நிறைவேறும்.

சமூகத்தில் நற்பெயரும், புகழும் கிடைக்கும் .தாய்வழி உறவினர் பாசத்துடன் பழகுவர். பிள்ளைகள் படிப்பு வேலைவாய்ப்பில் முன்னணி வகிப்பர். நோய் தொந்தரவு விலகி ஆரோக்கியம் மேம்படும். மனைவி கருத்து ஒற்றுமையுடன் நடந்து கொள்வார். வெளியூர் பயணம் எதிர்பார்த்த நன்மையைத் தரும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப்பணி மேற்கொள்வீர்கள். பணியாளர்கள் பணியிலக்கை விரைந்து முடிப்பர். பெண்களுக்கு தாய்வீட்டாரின் உதவி கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் நல்ல தேர்ச்சி பெறுவர்.
பரிகாரம் : துர்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.

சந்திரன், சுக்கிரன் நற்பலன் வழங்குவர். நேர்த்தியுடன் பணிகளில் ஈடுபடுவீர்கள். அக்கம் பக்கத்தினர் அன்பு பாராட்டுவர்.

தாயின் அன்பும் ஆசியும் ஊக்கம் தரும். புத்திரர் பெற்றோரின் வார்த்தையை ஏற்று செயல்படுவர். பூர்வ சொத்தில் ஓரளவு வளர்ச்சி உண்டாகும். எதிர்ப்பாளரிடம் விலகியிருப்பது நல்லது. மனைவி குடும்ப ஒற்றுமை பலம் பெற பணியாற்றுவார்.தொழில் வியாபாரத்தில் மிதமான பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் கூடுதல் வேலைவாய்ப்பு மூலம் வருமானம் காண்பர். பெண்கள் புத்தாடை, ஆபரணம் வாங்குவர். மாணவர்கள் கல்வியில் வளர்ச்சியடைவர்.
பரிகாரம்: பைரவர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்

பெரும்பான்மை கிரகங்களால் அனுகூல பலன் கிடைக்கும். சமூக நிகழ்வுகளால் மனதில் நல்ல மாற்றம் ஏற்படும். நண்பர்களின் மனமறிந்து உதவுவீர்கள்.

வெளியூர் பயணத்தால் எதிர்பார்ப்பு நிறைவேறும். புத்திரரின் உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். இஷ்டதெய்வ அருள் துணை நிற்கும்.எதிர்ப்பு விலகி வாழ்வில் முன்னேற வழி பிறக்கும். மனைவியின் நம்பிக்கை உரியவராவீர்கள். தொழில், வியாபாரத்தில் போட்டி குறைந்து லாபம் கூடும். பணியாளர்கள் புதிய தொழில்நுட்பம் அறிந்து கொள்வர். பெண்கள் வீட்டு அலங்கார பொருட்கள் வாங்குவர். மாணவர்கள் நன்கு படித்து பரிசு பாராட்டு பெறுவர்.
பரிகாரம் : சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

சூரியன், செவ்வாய், புதன், ராகு அளப்பரிய நன்மை தருவர். உடன்பிறந்தோர் அன்பு பாசத்துடன் உதவுவர். மனதில் தன்னம்பிக்கை நிறைந்திருக்கும். புதிய வீடு, வாகனம் வாங்க அனுகூலம் உண்டு.

புத்திரரின் தகுதியும், திறமையும் வளர தேவையானதைச் செய்வீர்கள். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவுகளைத் தவிர்க்கவும். மனைவியிடம் உறவினர் குடும்ப விவகாரம் பேச வேண்டாம். வெளியூர் பயணம் ஓரளவு நன்மை தரும்.தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற புதியவர்களின் ஆதரவு கிடைக்கும். பணியாளர்கள் சிறப்பாக பணிபுரிந்து நற்பெயர் பெறுவர். பெண்கள் நகை, பணம் இரவல் கொடுக்க வேண்டாம். மாணவர்கள் படிப்பில் முன்னேற நண்பரின் உதவி கிடைக்கும்.
பரிகாரம் : பைரவர் வழிபாடு கஷ்டம் போக்கும்.

புதன், சுக்கிரன், சந்திரன் யோகபலன் தருவர். உழைப்பிற்கான பலன் முழு அளவில் வந்து சேரும். நிம்மதி நிறைந்த வாழ்வு அமையும். அறிமுகமில்லாதவர்க்கு வீடு, வாகனத்தில் இடம் தர வேண்டாம்.

புத்திரரின் உடல்நலத்தில் அக்கறை கொள்வீர்கள். வழக்கு, விவகாரத்தில் தீர்வு கிடைக்க தாமதம் உண்டாகும். நிபந்தனையுடன் கடன் வாங்க வேண்டாம். மனைவியின் ஆர்வமிகு செயல் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் இடையூறு மறையும். பணவரவு அதிகரிக்கும். பணியாளர்கள் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு, வெகுமதி பெறுவர். பெண்கள் குடும்பநலன் பாதுகாத்திடுவர். மாணவர்களுக்கு படிப்பில் ஞாபகத்திறன் வளரும்.
பரிகாரம்: மகாலட்சுமி வழிபாடு ஐஸ்வரியம் தரும்.

குரு, கேது, சுக்கிரன், சனீஸ்வரால் அதிர்ஷ்டபலன் கிடைக்கும். உங்கள் நடை உடை பேச்சில் வசீகரம் உண்டாகும்.

தம்பி தங்கை அன்பு பாசம் கொள்வர். புதிய வீடு, வாகனம் வாங்கலாம். புத்திரர் படிப்பு, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காண்பர். பூர்வ சொத்தில் பணவரவு கூடும். குடும்ப விவகாரம் சுமுக தீர்வுக்கு வரும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை செழித்து ஆதாயம் சேமிப்பாகும். பணியாளர்கள் சுறுசுறுப்புடன் பணிபுரிவர். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவர். மாணவர்களுக்கு படிப்பில் ஞாபகத்திறன் வளரும்.
பரிகாரம்: ஆஞ்சநேயர் வழிபாடு வெற்றியளிக்கும்.

சந்திரன், புதன் அனுகூல பலன் வழங்குவர். பேசுவதில் நிதானம் தேவை. சமூகத்தில் புதிய அனுபவம் பெறுவீர்கள்.

வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். புத்திரர் பெற்றோரின் வழிகாட்டுதல் ஏற்று செயல்படுவர். எதிரியிடம் விலகுவதால் சிரமம் தவிர்க்கலாம். மனைவியின் ஆர்வமிகு செயலில் குளறுபடி ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் அதிக உழைப்பால் வளர்ச்சி காண்பீர்கள். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டம் மதித்து செயல்படவும். பெண்கள் செலவில் சிக்கனம் பின்பற்றவும். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தவும்.
பரிகாரம்: தன்வந்தரி வழிபாடு ஆரோக்கியம் தரும்.

சூரியன் சந்திரனால் அனுகூலபலன் கிடைக்கும். பணிகள் நிறைவேற கடின உழைப்பு தேவைப்படும். குடும்பத்தினருக்கான பணத்தேவை அதிகரிக்கும். வெளியூர் பயணத்தில் உரிய பாதுகாப்பு அவசியம்.

புத்திரர் தயக்கமுடன் செயல்படுவர். சொத்து ஆவணம் பிறர் பொறுப்பில் தரக் கூடாது. கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். மனைவி உங்களின் நல்ல குணத்தை பாராட்டுவார். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சியும், பணவரவும் திருப்திகரமாக இருக்கும்.பணியாளர் கூடுதல் தொழில்நுட்பம் அறிந்து கொள்வர்.பெண்கள் பணம் சேமிப்பதில் ஆர்வம் கொள்வர்.மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தவும்.
சந்திராஷ்டமம்: 6.6.19 மாலை 4:48 மணி – 8.6.19 இரவு 7:30 மணி
பரிகாரம்: முருகன் வழிபாடு நம்பிக்கை வளர்க்கும்.

பெரும்பான்மை கிரகங்கள் அனுகூல அமர்வில் உள்ளனர். நற்பெயரும், புகழும் சேரும். குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி நிறைந்திருக்கும். உடன்பிறந்தவர்களால் உதவி உண்டு. நவீன வசதி நிறைந்த வீட்டுக்கு சிலர் இடம் மாறுவர். புத்திரரின் செயல் சிறப்பாக அமையும். கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். மனைவியின் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும்.தொழில் வியாபாரம் செழித்து பணவரவு கூடும். பணியாளர்கள் நிர்வாகத்திடம் நன்மதிப்பு பெறுவர். பெண்கள் உறவினரின் குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த உதவுவர். மாணவர்கள் முன்னேற்றம் காண்பர்.

சந்திராஷ்டமம்: 9.6.19 காலை 6:00 மணி – 10.6.19 இரவு 9:53 மணி
பரிகாரம் : துர்கை வழிபாடு சகல நன்மை தரும்.

சுக்கிரன், கேது, சந்திரன், சனீஸ்வரரால் நன்மை ஏற்படும். அக்கம் பக்கத்தினரால் உதவி கிடைக்கும். அன்றாடப் பணி எளிதாக நிறைவேறும்.

புதிய வீடு, வாகனம் வாங்கலாம். புத்திரர் உங்கள் வழிகாட்டுதல்களை தாமதமாக ஏற்றுக் கொள்வர். சத்தான உணவு உண்டு மகிழ்வீர்கள். பகைவரால் உருவான தொந்தரவு விலகும். மனைவியின் ஆலோசனை மனதில் நம்பிக்கை தரும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறைந்து லாபம் சீராகும். பணியாளர்கள் கூடுதல் தொழில்நுட்பம் அறிந்து கொள்வர். பெண்கள் மகிழ்ச்சிகரமான வாழ்வு நடத்துவர். மாணவர்கள் படிப்பில் ஆர்வமுடன் ஈடுபடுவர்.
சந்திராஷ்டமம்: 10.6.19 இரவு 9:54 மணி – 12.6.19 இரவு 12:51 மணி
பரிகாரம் : நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.

சூரியன், குரு, புதன், சுக்கிரன் அளப்பரிய நற்பலன் தருவர். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள்.
உடன்பிறந்தவர் அதிக அன்பு பாராட்டுவர். வீடு, வாகனத்தில் நவீன மாற்றம் செய்வீர்கள். புத்திரர் படிப்பு, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காண்பர். வழக்கு, விவகாரத்தில் வெற்றி கிடைக்கும். மனைவி உங்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்வார். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். தொழில், வியாபாரம் புதியவர்களின் ஆதரவினால் செழித்து வளரும். பணியாளர்கள் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு காண்பர். பெண்கள் கலையம்சம் நிறைந்த பொருள் வாங்குவர். மாணவர்கள் படிப்பில் முன்னேறுவர்.
சந்திராஷ்டமம்: 12.6.19 இரவு 12:52 மணி – 15.6.19 அதிகாலை 5:15 மணி
பரிகாரம்: விநாயகர் வழிபாடு சங்கடம் போக்கும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here