தல 60: அப்டேற்!

போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஓகஸ்ட் 10ம் திகதி படம் ரிலீஸ் ஆகிறது.

இந்தநிலையில் அஜித் அடுத்ததாக மீண்டும் வினோத் இயக்கத்தில் தான் நடிக்க இருக்கிறார். அதேபோல் போனி கபூர் தான் இந்த திரைப்படத்தையும் தயாரிக்கிறார், நேர்கொண்ட பார்வை பாலிவுட் படத்தின் ரீமேக் ஆகும், ஆனால் தல 60 வினோத்தின் புதிய ஸ்டோரி என கூறப்படுகிறது.

தல 60 படத்தில் அஜித் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிப்பார் என சமீபத்தில் தகவல் வெளியாகியது. ஆனால் தற்போது மேலும் ஒரு தகவல் கிடைத்துள்ளது. அஜித் போலீஸாக மட்டுமல்லாமல் பைக் ரேஸ்சராகவும் நடிக்கிறாராம்.

அதேபோல் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க வெளிநாடுகளில்தான் படமாக்கப்பட இருக்கிறது. பைக் சேசிங் காட்சிகள் இந்த படத்தில் இருக்கும் என கூறியுள்ளார்கள். தல 60 கிட்டத்தட்ட ஜேம்ஸ் பாண்ட் பட பாணியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here