விஷால் அணி வேட்புமனு தாக்கல் செய்தது!

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வருகிற ஜனவரி 23ம் திகதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் கடந்த முறை போட்டியிட்டு வென்ற பாண்டவர் அணியே மீண்டும் களமிறங்குகிறது. நாசர் தலைவர் பதவிக்கும், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும், துணை தலைவர்கள் பதவிக்கு கருணாஸ், பூச்சி முருகன் போட்டியிடுகின்றனர்.

இவர்கள் தவிர செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கும் குஷ்பு, மனோபாலா, பசுபதி உள்ளிட்ட பலரும் களமிறங்குகின்றனர்.

இந்த அணியை எதிர்த்து ஐசரி கணேஷ் தலைமையில் பாக்யராஜை தலைவராக கொண்ட ஒரு அணி களமிறங்குகிறது. ஐசரி கணேஷ் விஷாலை எதிர்த்து பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறார். குட்டி பத்மினியும், உதயாவும் துணை தலைவர்கள் பதவிக்கும், பொருளாளர் பதவிக்கு நடிகர் ஜெயம் ரவியும் போட்டியிடுகின்றனர்.

தேர்தலுக்கு நேற்று முதல் வேட்புமனுக்கள் விநியோகம் தொடங்கப்பட்டு இன்று (ஜூன் 8) முதல் மனுதாக்கல் தொடங்கியது. முதல்நாளிலேயே பாண்டவர் அணியினர் மனு தாக்கல் செய்துள்ளனர். விஷால், பூச்சி முருகன், குஷ்பு, மனோபாலா, ரமணா உள்ளிட்ட 21பேர் அவர்கள் போட்டியிடும் பதவிகளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் கடந்த தேர்தலை போன்று இந்த தேர்தலும் அனல் பறக்கும் என தெரிகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here