சரத்- சசிக்குமார் கூட்டணி!

விஜய் ஆண்டனி நடித்த சலீம் படத்தை இயக்கிய நிர்மல்குமார், அடுத்து இயக்கி வரும் படத்தில் சசிகுமார் நடித்து வருகிறார். கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.மோகன்ராம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்கிறார்.

ஹீரோயின் யார் என்று முடிவாகாத நிலையில் இதன் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பு நேற்று மும்பையில் தொடங்கியது. இதில் சரத்குமார், சசிகுமாருடன் இணைந்து நடிக்கிறார். மும்பையில் 25 நாட்கள் படப்பிடிப்பு நடக்கிறது.

சசிகுமாரும், சரத்குமாரும் இணைந்து நடிக்கிறார்கள். சரத்குமார் இதுவரை நடித்திராத ஒரு கேரக்டரில், நடித்திராத கெட்அப்பில் நடிப்பதாக பட தயாரிப்பு தரப்பு தெரிவிக்கிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here