கிழக்கு ஆளுனர் ஹோல்டன் பெர்ணான்டோ?: இன்று மாலை பதவியேற்பு

கிழக்கு ஆளுனர் நியமனத்தில் பெரும் இழுபறி நிலவி வருகிறது. சுதந்திரக்கட்சியின் முன்னாள் செயலாளர் ரோஹண லக்ஷ்மன் பியதாசவின் பெயர் முன்னர் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டிருந்தாலும், தற்போது அதில் இழுபறி நிலவுவதாக தெரிகிறது.

தற்போதைய நிலையில் ரோஹண லக்ஷ்மன் பியதாச, ஹேமந்த நாணயக்கார, கோல்டன் பெர்ணான்டோ ஆகியோரின் பெயர்கள் ஆளுனர் பதவிக்காக தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இம்முறை கிழக்கு ஆளுனராக கிறிஸ்தவர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டுமென்ற பரிந்துரையும் ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கோல்டன் பெர்ணான்டோவிற்கே அதிக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

ஜனாதிபதியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளராகவும் செயற்பட்டு, கிழக்கு தொடர்பான அனுபவமுடையவர். இன்று அவர் ஜனாதிபதி மாளிகைக்கு அழைக்கப்பட்டுள்ளார் என்ற தகவலையும் தமிழ்பக்கம் பெற்றது. மாலை 6.30 மணியளவில் புதிய கிழக்கு ஆளுனர் நியமனம் நடைபெறுமென தெரிகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here