அடுத்த முறை போட்டியிட மாட்டேன்; ஐ.தே.க நல்ல வேட்பாளரை தெரிவு செய்தால் ஆதரிப்பேன்: அமைச்சரவையில் மனம் திறந்த மைத்திரி!

“ஐ.தே.க நல்லதொரு ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்தால் நான் அவரை ஆதரிப்பேன். மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இப்போது என்னிடமில்லை“

இவ்வாறு இன்று அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மற்றும் ஐ.தே.க பிரமுகர்கள் முன்னிலையில் இன்று தெரிவித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

இன்று காலையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் தற்போதைய அரசியல் நிலைமை, எதிர்கால அரசியல் பற்றியெல்லாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீண்டநேரம் மனம்விட்டு பேசினார்.

இதன்போதே, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதில்லையென ஜனாதிபதி தெரிவித்ததாக, மூத்த அமைச்சர் ஒருவர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here