இராணுவ பாதுகாப்புடன் வரலாற்று சிறப்புமிக்க புதூர் நாகதம்பிரான் பொங்கல் விழா

வரலாற்று சிறப்புமிக்க புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா சிறப்பாக இன்று இடம்பெற்று வருகின்றது. காலை முதல் பக்த அடியார்கள் தமது நேர்த்திக்கடனை செலுத்தி வருவதுடன் காவடிகள், பறவைக்காவடிகள், தூக்குக்காவடிகள் என பக்த அடியார்கள் அலையெனத்திரண்டு வருகின்றதை அவதானிக்க முடிந்துள்ளது.

இன்று காலையிலிருந்து மக்கள் புளியங்குளம் நகாதம்பிரானை வழிபடுவதற்காகச் சென்று கொண்டிருப்பதை அவதானிக்க முடிந்துள்ளது. பொலிசார், படையினர், விஷேட அதிரடிப்படையினர், ஆலய பரிபாலனசபையினரின் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் பூரண ஒத்துழைப்புடன் இடம்பெற்றுவருகின்றது. பிற மாவட்டங்களிலிருந்து பக்த அடியார்கள் இ.போ.ச சாலை பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் சேவையினை மேற்கொண்டு வருகின்றதை அவதானிக்க முடிந்துள்ளது.

அப்பகுதியெங்கும் வண்ணமயமாகக்காட்சியளிக்கின்றது. இன்று இரவு அதிகளவான பக்த அடியார்கள் ஆலயத்தில் ஒன்றுகூடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here