புளொட்டிற்கு மட்டுவிலும் அல்வா கொடுக்க முயற்சி … தமிழரசின் கோவணமும் கழன்றது!

யாழ்ப்பாணம் சுன்னாக பிரதேசசபையில் நடந்ததைபோல, மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசசபையிலும் புளொட் அமைப்பிற்கு முதுகில் குத்தும் காரியத்தை செய்ய முயன்று, கட்டியிருந்த கோவணமும் அவிழ்ந்த கதையாக மண்கவ்வியிருக்கிறது தமிழரசுக்கட்சி. புளொட்டிடம் இருந்து தவிசாளர் பதவியை பறிக்க முயன்று, இப்பொழுது தவிசாளர் பதவியை மொத்தமாக இழந்து நிற்கிறது தமிழரசுக்கட்சி.

உள்ளூராட்சிசபைகளை கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் பங்கிட்ட சமயத்தில், ஆரையம்பதி பிரதேசசபை புளொட் அமைப்பிற்கு வழங்கப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலின் பின், தவிசாளர்களை தீர்மானிப்பதில் கட்சிகள் தீவிரமாகின. இதன்போது, ஆரையம்பதி பிரதேசசபை தவிசாளராக தோமஸ் சுரேந்திரன் என்பவரை புளொட் சார்பில் வியாழேந்திரன் எம்.பி பிரேரித்தார்.

இதற்குள் இலங்கை பாராளுமன்ற குழு சார்பில் மட்டக்களப்பு எம்.பி வியாழேந்திரன் சீனா சென்றிருந்தார். 01ம் திகதி கொழும்பை வந்தடைந்தார். 02ம் திகதி காலையில் மட்டக்களப்பிற்கு வந்துவிடுவேன் என அவர் அறிவித்திருந்தபோதும்,01ம் திகதியே அவசரஅவசரமாக தவிசாளர் யார் என்பதை தீர்மானிக்க தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர்கள் கூட்டத்தை கூட்டினர். சிறிநேசன் எம்.பி, துரைராசசிங்கம், ஜனா ஆகியோர் இந்த ஏற்பாட்டை செய்தனர்.

இந்த கூட்டத்திற்கு சென்ற புளொட் பிரதிநிதிகள், நாளை வரை தவிசாளர் தெரிவை ஒத்திவைக்க கோரியபோதும், தமிழரசுக்கட்சியினர் அதை கவனத்தில் எடுக்காமல் தன்னிச்சையாக தமது தரப்பிலிருந்து தவிசாளரை தெரிவுசெய்தனர். மண்முனை பற்று தமிழரசுக்கட்சி கிளை தலைவரான செ.மாணிக்கராசா என்பவரை தவிசாளராக தேர்வுசெய்தனர்.

பிரதேசத்தில் தமிழரசுக்கட்சியை வளர்க்க வேண்டும் என்பதற்காக, பங்காளிக்கட்சிகளின் காலைவாரி விட்டு, இந்த தெரிவு நடந்தது.

கடந்த 04ம் திகதி ஆரையம்பதி பிரதேசசபை தவிசாளர் தெரிவு நடந்தது. இதில் தமிழரசுக்கட்சியின் செ.மாணிக்கராசாவும், சுயேட்சை அணியின் சோ.மகேந்திரலிங்கமும் போட்டியிட்டனர். மகேந்திரலிங்கம் சுயேட்சை அணியில் போட்டியிட்டு, தனது வட்டாரத்தில் வெறும் 54 வாக்குகளை மட்டும் பெற்று படு தோல்வியடைந்தவர். ஆனால் விகிதாசார முறைமையில் உறுப்பினராகி விட்டார். அந்த சுயேட்சை சார்பில் இவர் மட்டும்தான் உறுப்பினர் ஆனார். எனினும் மற்றைய கட்சிகளுடன் பேசி, தவிசாளராகி விட்டார்.

பங்காளிகளின் காலைவாரி, தமிழரசுக்கட்சியை மட்டும் பிரதேசத்தில் வளர்க்க வேண்டுமென சிறிநேசன், துரைராசசிங்கம் போன்றவர்கள் முயற்சிக்க, அதற்கு ஜனா பக்கப்பாட்டு பாட- இறுதியில் கட்டியிருந்த கோவணமும் கழற்றப்பட்டுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here