இந்தவார ராசி பலன்கள் (2.6.2019- 8.6.2019)

சுக்கிரன், செவ்வாய், ராகு, சந்திரன் அளப்பரிய நற்பலன் தருவர். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். வளர்ச்சியை நோக்கி நடை போடுவீர்கள். தாய்வழி உறவினரால் உதவி உண்டு.

புத்திரர் நல்வழியில் செயல்பட மென்மையான அணுகுமுறை தேவை. வழக்கு, விவகாரங்களில் சமரசப் பேச்சு தீர்வுக்கு வழிவகுக்கும். மனைவி குடும்பத்தின் எதிர்கால நலனில் அக்கறை கொள்வார். தொழில், வியாபாரம் செழிக்க மாற்று உபாயம் தேவைப்படும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்றவும். பெண்கள் மனம் போல ஆடை, ஆபரணம் வாங்குவர். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர்.
பரிகாரம்: விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.

சுக்கிரன், குரு, சந்திரன் அனுகூல அமர்வில் உள்ளனர். தாமதமான பணிகள் ஒவ்வொன்றாக நிறைவேறும்.

சமூகத்தில் நற்பெயரும், புகழும் கிடைக்கும் .தாய்வழி உறவினர் பாசத்துடன் பழகுவர். பிள்ளைகள் படிப்பு வேலைவாய்ப்பில் முன்னணி வகிப்பர். நோய் தொந்தரவு விலகி ஆரோக்கியம் மேம்படும். மனைவி கருத்து ஒற்றுமையுடன் நடந்து கொள்வார். வெளியூர் பயணம் எதிர்பார்த்த நன்மையைத் தரும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப்பணி மேற்கொள்வீர்கள். பணியாளர்கள் பணியிலக்கை விரைந்து முடிப்பர். பெண்களுக்கு தாய்வீட்டாரின் உதவி கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் நல்ல தேர்ச்சி பெறுவர்.
பரிகாரம் : துர்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.

சுக்கிரன், சந்திரனால் நன்மை உண்டாகும். அன்றாடப் பணிகளை அக்கறையுடன் செயல்படுத்துவீர்கள். பணவரவு அதிகரிக்கும்.

சகோதர் வளர்ச்சிக்கு துணைநிற்பீர்கள். வீடு, வாகனத்தில் கூடுதல் பாதுகாப்பு வேண்டும். புத்திரர் படிப்பு, வேலையில் முன்னேறுவர். வழக்கு, விவகாரங்களில் பொறுமை காப்பது நல்லது. மனைவி பாசத்துடன் உதவ முன்வருவார். தொழிலில் உற்பத்தி விற்பனை சீராக இருக்கும். பணியாளர்கள் பணியிடச்சூழல் உணர்ந்து செயல்படவும். பெண்கள் கணவருடன் இணக்கமுடன் நடந்து கொள்வர். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை.
பரிகாரம்: ஆஞ்சநேயர் வழிபாடு வெற்றி தரும்.

பெரும்பான்மை கிரகங்களால் அனுகூல பலன் கிடைக்கும். சமூக நிகழ்வுகளால் மனதில் நல்ல மாற்றம் ஏற்படும். நண்பர்களின் மனமறிந்து உதவுவீர்கள்.

வெளியூர் பயணத்தால் எதிர்பார்ப்பு நிறைவேறும். புத்திரரின் உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். இஷ்டதெய்வ அருள் துணை நிற்கும்.எதிர்ப்பு விலகி வாழ்வில் முன்னேற வழி பிறக்கும். மனைவியின் நம்பிக்கை உரியவராவீர்கள். தொழில், வியாபாரத்தில் போட்டி குறைந்து லாபம் கூடும். பணியாளர்கள் புதிய தொழில்நுட்பம் அறிந்து கொள்வர். பெண்கள் வீட்டு அலங்கார பொருட்கள் வாங்குவர். மாணவர்கள் நன்கு படித்து பரிசு பாராட்டு பெறுவர்.
பரிகாரம் : சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

சூரியன், செவ்வாய், புதன், ராகு அளப்பரிய நன்மை தருவர். உடன்பிறந்தோர் அன்பு பாசத்துடன் உதவுவர். மனதில் தன்னம்பிக்கை நிறைந்திருக்கும். புதிய வீடு, வாகனம் வாங்க அனுகூலம் உண்டு.

புத்திரரின் தகுதியும், திறமையும் வளர தேவையானதைச் செய்வீர்கள். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவுகளைத் தவிர்க்கவும். மனைவியிடம் உறவினர் குடும்ப விவகாரம் பேச வேண்டாம். வெளியூர் பயணம் ஓரளவு நன்மை தரும்.தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற புதியவர்களின் ஆதரவு கிடைக்கும். பணியாளர்கள் சிறப்பாக பணிபுரிந்து நற்பெயர் பெறுவர். பெண்கள் நகை, பணம் இரவல் கொடுக்க வேண்டாம். மாணவர்கள் படிப்பில் முன்னேற நண்பரின் உதவி கிடைக்கும்.
பரிகாரம் : பைரவர் வழிபாடு கஷ்டம் போக்கும்.

புதன், சுக்கிரன், சந்திரன் யோகபலன் தருவர். உழைப்பிற்கான பலன் முழு அளவில் வந்து சேரும். நிம்மதி நிறைந்த வாழ்வு அமையும். அறிமுகமில்லாதவர்க்கு வீடு, வாகனத்தில் இடம் தர வேண்டாம்.

புத்திரரின் உடல்நலத்தில் அக்கறை கொள்வீர்கள். வழக்கு, விவகாரத்தில் தீர்வு கிடைக்க தாமதம் உண்டாகும். நிபந்தனையுடன் கடன் வாங்க வேண்டாம். மனைவியின் ஆர்வமிகு செயல் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் இடையூறு மறையும். பணவரவு அதிகரிக்கும். பணியாளர்கள் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு, வெகுமதி பெறுவர். பெண்கள் குடும்பநலன் பாதுகாத்திடுவர். மாணவர்களுக்கு படிப்பில் ஞாபகத்திறன் வளரும்.
பரிகாரம்: மகாலட்சுமி வழிபாடு ஐஸ்வரியம் தரும்.

குரு, சுக்கிரன், கேது, சனீஸ்வரர் ராஜயோகபலன் தருவர். நற்செயலுக்கான நன்மை தேடிவரும்.தம்பி தங்கையர் முன்னேற துணை நிற்பீர்கள்.

நண்பருடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புத்திரர் படிப்பு, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காண்பர். பகைவரால் உருவான சிரமம் நீங்கும். ஆரோக்கியம் பலம் பெறும். மனைவியின் செயல்கள் சிறப்பாக அமைந்து குடும்பத்திற்கு பெருமை சேர்க்கும். தொழில்,வியாபாரத்தில் புதியவர்களின் ஆதரவால் வளர்ச்சி காண்பீர்கள். பணியாளர்கள் பணியிலக்கை நிறைவேற்றி சலுகை பெறுவர். பெண்கள் புத்தாடை நகை வாங்குவர்.மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர்.
சந்திராஷ்டமம்: 2.6.19 காலை 7:01 மணி – 4.6.19 பகல் 12:52 மணி
பரிகாரம்: சிவன் வழிபாடு முன்னேற்றம் தரும்.

புதன் சந்திரனால் நற்பலன் கிடைக்கும். திட்டமிட்ட பணிகளை சமயோசிதமாக நிறைவேற்றுவீர்கள். தாய்வழி உறவினர் பாசத்துடன் உதவுவர்.

புத்திரர் விரும்பிய பொருளுக்காக பிடிவாதமுடன் செயல்படுவர். உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். எதிர்ப்பாளரிடம் இருந்து விலகுவது நல்லது. மனைவியுடன் வாக்குவாதம் வேண்டாம். குடும்பத்தில் ஒற்றுமை பேணுவது அவசியம். தொழில் வியாபாரத்தில் ஆதாயம் சீராக கிடைக்கும். பணியாளர்கள் பணியிடச்சூழல் உணர்ந்து செயல்படவும். பெண்கள் நகை இரவல் கொடுக்க வேண்டாம். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை தேவை.
சந்திராஷ்டமம்: 4.6.19 பகல் 12:53 மணி – 6.6.19 மாலை 4:47 மணி
பரிகாரம்: சாஸ்தா வழிபாடு சகல நன்மை தரும்.

சூரியன் சந்திரனால் அனுகூலபலன் கிடைக்கும். பணிகள் நிறைவேற கடின உழைப்பு தேவைப்படும். குடும்பத்தினருக்கான பணத்தேவை அதிகரிக்கும். வெளியூர் பயணத்தில் உரிய பாதுகாப்பு அவசியம்.

புத்திரர் தயக்கமுடன் செயல்படுவர். சொத்து ஆவணம் பிறர் பொறுப்பில் தரக் கூடாது. கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். மனைவி உங்களின் நல்ல குணத்தை பாராட்டுவார். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சியும், பணவரவும் திருப்திகரமாக இருக்கும்.பணியாளர் கூடுதல் தொழில்நுட்பம் அறிந்து கொள்வர்.பெண்கள் பணம் சேமிப்பதில் ஆர்வம் கொள்வர்.மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தவும்.
சந்திராஷ்டமம்: 6.6.19 மாலை 4:48 மணி – 8.6.19 இரவு 7:30 மணி
பரிகாரம்: முருகன் வழிபாடு நம்பிக்கை வளர்க்கும்.

பெரும்பான்மை கிரகங்களால் வியத்தகு நற்பலன் கிடைக்கும். குடும்பத்தினர் பாச பந்தமுடன் நடப்பர். நற்செயலில் ஈடுபட்டு புகழ் பெறுவீர்கள்.

புதிய வீடு வாகனம் வாங்க யோகம் உண்டு. பூர்வீகச் சொத்தில் பணவரவு கூடும். புத்திரரின் வெகுநாள் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். ஆரோக்கியம் மேம்படும். மனைவியின் யோசனை குடும்ப நலனுக்கு உதவும். தொழில், வியாபாரத்தில் போட்டி மறையும். லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் சிறப்பாக பணிபுரிந்து பரிசு, பாராட்டு பெறுவர்.பெண்கள் இஷ்டதெய்வ வழிபாடு நடத்துவர். மாணவர்களுக்கு படிப்பில் ஞாபகத்திறன் வளரும்.
சந்திராஷ்டமம்: 8.6.19 இரவு 7:31 மணி – நாள் முழுவதும்
பரிகாரம்: குரு வழிபாடு மங்கள வாழ்வு தரும்.

சந்திரன், சுக்கிரன், கேது, சனீஸ்வரர் சுபபலன் வழங்குவர். நேர்மையால் நற்பெயரை வளர்த்துக் கொள்வீர்கள்.நிலுவைப்பணி எளிதாக நிறைவேறும். தம்பி, தங்கைக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள்.

வெளியூர் பயணம் மூலம் இனிய அனுபவம் கிடைக்கும். புத்திரர் படிப்பு, வேலையில் முன்னேற்றம் காண்பர். உறவினர் வருகை மகிழ்ச்சி தரும். வழக்கு விவகாரத்தில் நல்ல தீர்வு கிடைக்கும். மனைவி உங்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்வார். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியால் ஆதாயம் உயரும். அரசு சார்ந்த உதவி கிடைக்கும். பணியாளர்கள் பணி இலக்கை விரைந்து நிறைவேற்றுவர். பெண்கள் இஷ்டதெய்வ வழிபாடு நடத்துவர். மாணவர்கள் ஆர்வமுடன் படிப்பர்.
பரிகாரம்: பெருமாள் வழிபாடு செல்வ வளம் தரும்.

சூரியன், புதன், குரு, சுக்கிரன் ராஜயோகபலன் தருவர். தொலைநோக்குடன் செயல்பட்டு வருவீர்கள். பொது இடங்களில் சூழல் உணர்ந்து செயல்படுவீர்கள்.

உடன்பிறந்தவர் வகையில் மங்கள நிகழ்ச்சி நடந்தேறும். புதிய வீடு, வாகனம் வாங்க வாய்ப்புண்டு. பிள்ளைகள் நற்செயலால் பெற்றோருக்கு பெருமை தேடித் தருவர். நண்பருக்கு கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். மனைவியால் எதிர்பாராத நன்மை காண்பீ்ர்கள். தொழில் வியாபாரத்தில் போட்டி குறையும். சேமிக்கும் விதத்தில் லாபம் வரும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள் தாய் வீட்டாருக்கு உதவுவர். மாணவர்கள் போட்டியில் பங்கேற்று பரிசு பெறுவர்.
பரிகாரம்: அம்பிகை வழிபாடு ஆனந்தம் அளிக்கும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here