ஊசி மருந்துகள் மூலம் ஊத வைத்த ஆணழகன்!


ஊசி மருந்துகள் மூலம் தனது கை தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு புஷ்டியாக்கி ஆணழகனுக்கு மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பிரேசில் நாட்டின் வால்டிர் செகாட்டோ என்பவர் உடற்பயிற்சி மீது தீராத காதல் கொண்டிருந்தார். இதற்காக உடற்பயிற்சி மையத்திற்கு சென்று தனது உடலின் தசைகளை மேம்படுத்தினார்.

ஆனாலும் திருப்தியடையாத வால்டிர், தசை வளர்ச்சிக்கென பிரத்யேகமான ஊசி மருந்துகளை பயன்படுத்தத் தொடங்கினார். இதன் காரணமாக வால்டிரின் புஜத் தசைகள் கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு வளர்ந்தன.

மேலும் அவரின் நெஞ்சுப்பகுதி தசைகள் கிட்டத்தட்ட ஒரு அடிக்கும் அதிகமாக வளர்ந்து ஒழுங்கற்ற முறையில் அமைந்துள்ளன. வால்டிர் தொடர்ந்து ஊசிகளைப் பயன்படுத்தினால் அவரது உயிருக்கு ஆபத்தாக முடியும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here