குருணாகல் வைத்தியருக்கு 17 காணிகள்: விசாரணையில் வெளியாகும் ‘பகீர்’ தகவல்கள்!

குருநாகல் வைத்தியசாலையின் மகப்பேற்று பிரிவில் பணியாற்றிய வைத்தியர் செய்கு சிஹாப்தீன் மொஹமட் சபி தொடர்பாக இன்றும் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளது திவயின.

அவர் பல மில்லியன் ரூபா பணம் சேகரித்து வைத்திருந்ததும், குருநாகலை அண்டிய பகுதிகளில் 17 காணிகளிற்கு உரிமையாளராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

2015ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக வைத்திய சேவையிலிருந்து இடைவிலகியிருந்தார். பின்னர் விசேட அமைச்சரவை பத்திரம் மூலம் வைத்திய சேவையில் இணைந்து, குருநாகல் வைத்தியசாலையின் மகப்பேற்று பிரிவில் பணியாற்றி வந்தார். இந்த காலப்பகுதியிலேயே இவ்வளவு பெருந்தொகை கருத்தடை சத்திரசிகிச்சை சிங்கள பெண்களிற்கு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here