தென்னிலங்கையில் தொடர் மழை:வானிலை மையம் விடுக்கும் எச்சரிக்கை

தென்னிலங்கையின் காலி, மாத்தறை பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், தொடர்ந்தும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுவரை கொட்டித் தீர்த்த மழையை விடுத்து மீண்டும் 150 மில்லி லீற்றர் மழை பதிவாகக் கூடும் என இன்று வெளியாகியுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24மணித்தியாலங்களில் பெய்த மழையில், ஆனவடுவ பகுதியிலேயே அதிகளவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அத்துடன் அக்கரப்பத்தனை மற்றும் அல்தோரி ஆகிய தோட்டங்களில் மண்சரிவு காரணமாக 10 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதுடன், அவர்கள் அக்கரப்பத்தனை நூலகமொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அப்பகுதியில் 2வீடுகள் மண்சரிவிற்குள் புதைந்துள்ளதாகவும், மழை கொட்டிய இடங்களில் போக்குவரத்துக்கள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ஆண்டிகம, தமன்கடுவ, மாத்தளை, இரத்தினபுரி, துடுவ, குக்குளேகங்க ஆகிய இடங்களே குறித்த மழை காரணமாக அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here