கிளிநொச்சியில் கோரம்: முதியவரை இரண்டு துண்டாக்கியது புகையிரதம்!

கிளிநொச்சி இரணைமடுசந்தியில் இன்றிரவு இடம்பெற்ற இரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இரணைமடு பகுதியை சேர்ந்த இராசேந்திரம் (62) இவ்வாறு உயிரிழந்தவராவர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த இரவு நேர தபால் இரயிலேயே இவ் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உடலின் மேற்பகுதி வேறாகவும், இடுப்புக்கு கீழ் பகுதி வேறாகவும் காணப்பட்டது. இந்நிலையில் இரயில் பயணம் தாமதமடைந்த்துடன் சடலத்தை மீட்ட இரயில்வே அதிகாரிக்கள் சடலத்தை அடுத்த புகையிரத நிலையத்தில் ஒப்படைத்து சென்றனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here