இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக கூறிய நகர மேயருக்கு எதிராக கனடாவில் சிங்களவர்கள் போராட்டம்!


இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதை ஏற்றுக்கொள்கிறேன் என கூறியிருந்த கனடாவின் பிரம்ரன் நகர மேயருக்கு எதிராக அங்கு வசிக்கும் சிங்களவர்கள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கையில் 26 ஆண்டுகளாக இடம்பெற்ற சிவில் யுத்தத்தில் தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளானார்கள் என்பதை ஏற்றுக் கொண்டதற்காக பிரம்ரன் நகர மேயர் பற்றிக் பிரவுன் குறிப்பிட்டிருந்தார். இதேவேளை, பிரம்ரன் நகரசபையில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, ஒவ்வொரு வருடமும் மே 18ம் திகதியை தமிழர் இனஅழிப்பு நாளாக அனுட்டிக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், மேயரின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறுதொகை சிங்களவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரம்ரன் நகர மண்டபத்திற்கு முன்பாக இந்த போராட்டம் நடைபெற்றது.

மேயரின் கருத்தை விமர்சித்து பதாதைகளை போராட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர்.

‘ஒரு தேசிய இனத்தை அல்லது சமய குழுவை முழுதாகவோ அல்லது பகுதியாகவோ அழிப்பதை நோக்காக கொண்டு மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள்தான் இனப்படுகொலை. இந்த விளக்கத்தின்படி பார்த்தால், இலங்கையில் அது நடக்கவில்லை’ என்பது உள்ளிட்ட வசனங்கள் எழுதப்பட்டிருந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here