புத்தளத்திற்கு வந்து சேர்ந்தது கொழும்புக் குப்பை!


பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி இன்று புத்தளத்திற்கு குப்பைகள் வந்து சேர்ந்தது.

குளியாப்பிட்டிய பிரதேசசபையால் சேகரிக்கப்பட்ட குப்பைகளின் ஒரு பகுதியை ஏற்றிய டிப்பர் வாகனமொன்று அருவைக்காளு சுண்ணக்குழிகளில் குப்பைகளை கொட்டியது.

கொழும்பு புத்தளம் பாதையூடாக வந்த குப்பையேற்றிய வாகனம், மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கலாமென்பதால் பொலிஸ் பாதுகாப்புடன் மன்னார் வீதியில் பயணம் மேற்கொண்டு குப்பைகளை கொட்டியுள்ளது.

சம்பவத்தை அறிந்த பிரதேசவாசிகள், வனாத்தவில்லு பிரதேசசபை தலைவர் மற்றும் சில உறுப்பினர் அங்கு சென்று தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.

மீள்சுழற்சி செய்யாத குப்பைகளே புத்தளத்தில் கொட்டப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here