UPDATE: ரிசாட், ஹிஸ்புல்லாஹ் பதிவி விலக வேண்டும்; இல்லாவிட்டால் நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிப்போம்: ரெலோ அதிரடி முடிவு!

அமைச்சர் ரிசாட் பதியுதீன், கிழக்கு ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் உடனடியாக பதவி விலகி, நீதியான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அவர்கள் விலக மறுத்தால், அவரை அரசாங்கம் பதவிவிலக்க வேண்டும். அதையும் மீறி ரிசாட் பதியுதீன் விடாப்பிடியாக பதவியில் இருந்தபடி நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொண்டால், அந்த பிரேரணையை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என ரெலோ இன்று அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

வவுனியாவிலுள்ள ரெலோ தலைமையகத்தில் இன்று, கட்சியின் தலைமைக்குழு கூட்டம் நடந்தது. இதன் போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ரெலோ தலைமைக்குழு உறுப்பினர்கள் 24 பேரில், இன்று பதினொரு பேரே கலந்து கொண்டனர். செல்வம் அடைக்கலம், என்.சிறிகாந்தா, எம்.கே.சிவாஜிலிங்கம், கோவிந்தன் கருணாகரம், இந்திரகுமார் பிரசன்னா, விந்தன் கனகரட்ணம், அஞ்சலா, நித்தியானந்தம், வினோ நோகராதலிங்கம், குரூஸ், சுரேன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஐஎஸ் அமைப்பின் பின்னணியில் நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அரசியல்வாதிகளின் பின்னணியுடையவர்கள் என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. சந்தேகநபர்களை விடுவிக்க முயற்சித்ததாக இராணுவத்தளபதியும் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், ரிசாட் பதியுதீன், ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தமது பதவிகளை துறந்து நீதி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும். அதை அவர்கள் செய்யாவிட்டால் அரசாங்கம் அவர்களை பதவிவிலக்க வேண்டும். அதையும் செய்யாமல், நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்வதென ரிசாட் பதியுதீன் முடிவெடுத்தால், நம்பிக்கையில்லா பிரேரணையை ரெலோவின் இரண்டு எம்.பிக்களும் ஆதரித்து வாக்களிப்பதென முடிவெடுக்கப்பட்டது.

கலந்துரையாடலின் பின்னர், பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி கட்சியின் தீர்மானம் அறிவிக்கப்பட்டது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here