ஆலய பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரையா?: கோயிலுக்குள் மாறுவேடத்தில் வாழ்ந்த முஸ்லிம் சிக்கினார்!


திருகோணமலை ஆலயமொன்றில் வழங்கப்பட்ட பஞ்சாமிர்த்தத்தில் கருத்தடை மாத்திரைகள் கலக்கப்பட்டதாக பரவிய தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆலயத்தில் உதவியாளராக செயற்பட்ட ஒருவரை கைது செய்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முஸ்லிம் நபரான அவர், அடையாளத்தை மறைத்து கோயில் உதவியாளராக செயற்பட்டது தெரிய வந்தது. அவரது கையடக்க தொலைபேசியில் ஐ.எஸ் அமைப்பின் தகவல்கள் சிலவற்றையும் பொலிசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

மூதூர் கிளி­வெட்டி முத்­து­மா­ரி­யம்மன் ஆல­யத்திலேயே இந்த பரபரப்பு சம்பவம் இடம்பெற்றது.

ஆலய குருக்­க­ளுக்கு உத­வி­யா­ள­ராகச் செயற்­பட்ட நபர், பக்­தர்­க­ளுக்கு வழங்­கப்­படும் பஞ்­சா­மிர்­தத்தில் கருத்­தடை மாத்­தி­ரை­களை கலந்து கொடுத்­தார் என்று பக்­தர்கள் சந்­தே­கமடைந்து மூதூர் பொலிசாரிடம் முறையிட்டனர். இதையடுத்து, ஆலய நிர்­வா­ச­பை­யி­னரை அழைத்து நேற்று மூதூர் பொலிஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டனர்.

ஏறா­வூரைச் சேர்ந்த முஸ்லிம் நபரே தனது சொந்தப் பெயரை மறைத்து சிவா என்ற தமிழ் பெயரில் கிளி­வெட்டி முத்­து­மா­ரி­யம்மன் ஆலயத்தின் பூச­க­ருக்கு உத­வி­ய­ளா­ராக செயற்பட்டு வந்துள்ளார். கடந்த 02 வரு­டங்­க­ளாக உதவியாளராக இருக்கிறார்.

இவர் பூஜையின் போது பக்­தர்­க­ளுக்கு வழங்கும் பஞ்­சா­மிர்­தத்தில் கருத்­தடை மாத்­தி­ரை­களைக் கலந்து கொடுத்து வந்­துள்­ள­தாக பக்­தர்கள் சிலர் சந்­தே­கங்­களை எழுப்­பி­யுள்­ளனர்.

இந்தநிலையில், கடையொன்றில் கைய­டக்க தொலை­பே­சிக்­கான மீள்நிரப்பும் அட்­டை­களை திருடி சேரு­வில பகு­தியில் விற்றபோது, அந்த நபர் சிக்கினார். அவரை மூதூர் பொலிசார் விசா­ர­ணை செய்தபோது, அவர் குறித்து சந்தேகமடைந்த புலனாய்வு பிரிவினர் அவரை கண்காணிப்பிற்குட்படுத்தினர்.

இவர் ஏறா­வூரிலுள்ள தனது தாயாரின் வீட்­டுக்கு சென்று அங்­குள்ள பள்­ளிக்கு தொழுகை செய்ய சென்றதை அவதானித்தனர். இதன்மூலம் இவர் முஸ்லிம் நபர் என்­பது ஊர்­ஜி­த­மா­கி­யுள்­ளது.

இதற்­கி­டையில் இவர் பற்­றிய ஒரு தகவலை கிராமத்திலுள்ள இளைஞர்கள் சிலர் பேஸ்புக்கில் வெளியிட்டனர். இவர் முஸ்லிம் நபர், அடையாளத்தை மறைத்துள்ளார் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதை அவர் மறுத்திருந்தார். தன்­மீது பொறாமை உள்­ள­வர்­களே இந்த பதிவை வெளி­யிட்­டுள்­ளார்கள் என தெரி­வித்­திருந்தார். தனியார் நிறு­வ­ன­மொன்றில் ஆசி­ரி­ய­ராக பணிபுரியும் முஸ்லிம் பெண் ஒரு­வரை திரு­மணம் முடித்­த­தற்­கா­கவே தான் ஊரை விட்டு ஒதுக்கி வைக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்­துள்ளார்.

இவர் தொடர்­பான மேல­திக விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தற்­காக மூதூர் பொலிசார் ஆலய குருக்­க­ளையும் பரி­பா­லன சபை­யி­ன­ரையும் நேற்று சனிக்­கி­ழமை விசா­ர­ணைக்காக அழைத்திருந்தனர்.

கிளி­வெட்டி முத்­து­மா­ரி­யம்மன் ஆல­யத்தில் குருக்­க­ளின் உதவியாளராக பணியாற்றி வருகிறார், அவரது சம்பளத்தை குருக்களே வழங்குகிறார் என ஆலய நிர்­வாகம் கைவிரித்தது. இதையடுத்து குருக்களும் பொலிஸ் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

உதவியாளராக செயற்பட்டவர் பஞ்­சா­மிர்­தத்தில் கருத்­தடை மாத்திரையை கலந்து கொடுத்தாரா என்பது பற்றியும் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கைதான நபர் தன்னை சிவா என அறிமுகப்படுத்தியபோதும், அவரது உண்மையான பெயர் புஹாரி முக­மது லாபீர் கான் ஆகும். இவர் ஏறாவூரை பிறப்­பி­ட­மாகக் கொண்­ட­வ­ர். ஏற்கனவே ஏலவே மூன்று திரு­ம­ணங்கள் செய்­துள்ளார் எனவும் தெரிய வரு­கி­றது. மூத்த மனைவி ஓட்­ட­மா­வடி மீரா­வோடைச் சேர்ந்த அபுல் ஹாசன் சுபா­ஹனி என்றும், இரண்­டா­வது மனைவி மட்­டக்­க­ளப்பு கர­டி­ய­னாற்றைச் சேர்ந்த நல்­ல­தம்பி சாந்­தி­யென்ற தமிழ் பெண் என்றும், மூன்­றா­வ­தாக திரு­மணம் செய்­தவர் கல்முனையைச் சேர்ந்த ஏ.ஜே.எப்.சப்னா என்றும் தெரிய வருகிறது.

பாலியல் வல்லுறவு மற்றும் ஜீவனாம்சம் வழங்காமை ஆகிய குற்றச்செயல்களிற்காக இவருக்கு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவரது கையடக்க தொலைபேசியை பரிசீலித்த போது ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய சில தகவல்கள் கண்டறியப்பட்டதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here