சங்கிலியனின் 400வது நினைவுநாள்!

யாழ்ப்பாண இராச்சியத்தின் கடைசி தமிழ் மன்னனான சங்கிலியனின் 400 வது நினைவுநாள் இன்று நல்லூரிலுள்ள முத்திரைச்சந்தை சங்கிலியன் சிலைக்கு முன்பாக இடம்பெற்றது.

400 ஆண்டுகளின் முன்பாக சங்கிலிய மன்னனின் தோல்வியுடன் ஈழத்தமிழர் காலனியாதிக்கவாதிகளிடம் தமது இறைமையை இழந்தனர்.

இன்றைய சங்கிலின் நினைவு நிகழ்வை சிவசேனை அமைப்பு ஒழுங்கமைத்திருந்தது. இதில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி சீ.யோகேஸ்வரன், இந்தியாவின் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், பா.ஜ.க பிரமுகர், யாழ் இந்திய துணைத்தூதர், யாழ் மாநகரசபை முதல்வர், ஆணையாளர், அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here