இனி ஆணுறை, மாத்திரை வேண்டாம்… மோதிரமே போதும்!

குழந்தை பிறக்காமலிருப்பதற்காக உடலுறவின்போது ஆணுறை, கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்துவது வழக்கம். ஆனால் இதை பயன்படுத்துவதில் பலருக்கு பல்வேறு சிரமங்கள் உள்ளன.

இந்நிலையில் ஜோர்ஜியா இன்ஸ்டிடியூட் ஒஃப் டெக்னோலஜியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், பெண்களுக்கான கருத்தடை உபகரணங்களாக நகைகளை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர். ஹோர்மோன்கள் கலந்த கம்மல், மோதிரம், மணிக்கூடு, நெக்லஸ் ஆகிய அணிகலன்களை வடிவமைத்துள்ளனர். அவற்றை அணிந்து கொள்ளவதால் அவை தோல் வழியாக இரத்தத்தில் ஊடுருவி கருத்தரிக்காமல் தடுக்கும்.

இந்த நகை ஒரிரு நாட்கள் மட்டுமே இயங்கும். அதன்பின்னரும் அணிந்து கொண்டு உடலுறவில் ஈடுபட்டாலும் பலனிருக்காது.

இந்த நகைகளை மேம்படுத்தி, ,அதிக நாட்கள் பயன்பாட்டில் இருக்க முயற்சி செய்து வருகின்றனர். அது வெற்றியளித்தால் விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here