எப்படி வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ஆனார் குருணாகல் வைத்தியர்?


குருணாகல் வைத்தியசாலை வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹமட் சபி, கருத்தடை சிகிச்சைகள் மேற்கொண்டுள்ளார் என குருகாணல் வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

8,000 கருத்தடை சிகிச்சை மேற்கொண்டதாக  குற்றம்சாட்டப்பட்டு குருணாகல் வைத்தியசாலை வைத்தியர் மொஹமட் சபி கைது செய்யப்பட்டிருந்தார் என திவயின செய்தி வெளியிட்டிருந்தது. எனினும், அவர் சொத்து சேர்த்த விதத்தில் சந்தேகம் நிலவுவதால் விசாரணை செய்யப்படுவதாக பொலிசார் அறிவித்திருந்தனர்.

வைத்தியர் சபி, முன்னர் ரிசாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டிருந்தார். இதற்காக வைத்திய சேவையிலிருந்து இடைவிலகியிருந்தார். தேர்தலின் பின்னர் ஐ.தே.க கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறார்.

மீளவும் அவர் வைத்தியசேவைக்கு திரும்புவதற்கு, விசேட அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதேவேளை, குருணாகலில் தனியார் சிகிச்சை நிலையமொன்றையும் வைத்தியர் சபி ஆரம்பித்திருந்தார். அங்கேயும் கருத்தடை சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுதவிர, வீதி அமைப்பு, பராமரிப்பு ஒப்பந்த நிறுவனமொன்றையும் நடத்தி வந்திருக்கிறார். குறுகிய காலத்தில் அவர் எப்படி இவ்வளவு சொத்துக்களை சேர்த்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here