பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மடக்கிப்பிடிக்கப்பட்ட ரௌடிக்குழு உறுப்பினர்கள்!

வாள்வெட்டு கும்பல் ஒன்றின் தலைவனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை சுற்றிவளைத்த பொலிசார், வாள்வெட்டு சந்தேகநபர்கள் ஒன்பது பேரை கைது செய்துள்ளனர்.

மானிப்பாய் மற்றும் நவாலிப் பகுதிகளில் வைத்து அவர்கள் 9 பேரும் நேற்று மாலை கைது செய்யப்பட்டன.

யாழின் முக்கிய ரௌடியாக கூறப்பட்ட தனு ரொக்கின் பிறந்த நாளான நேற்று, யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் தினேஷ் கருணாரத்னவின் கீழ் இயங்கும் சிறப்பு பொலிஸ் பிரிவினர் மானிப்பாய் பகுதியில் சிவில் உடையில் களமிறக்கப்பட்டனர்.

மானிப்பாயில் தனு ரொக்கின் வீடு அமைந்துள்ள பகுதிக்கு பின்பக்கமாக உள்ள குளக்கட்டுப் பகுதியில் பிறந்த நாள் கொண்டாடிய ஐந்து பேரை பொலிசார் நேற்று மாலை வளைத்துப் பிடித்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையையடுத்து, நவாலி வயல் வெளி பகுதியில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட தனு ரொக் உள்ளிட்ட நால்வர் வளைத்துப் பிடிக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இருவருக்கு நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்கள் இருவரும் தலைமறைவாக இருந்து வந்துள்ளனர். நிலையில் தேடப்பட்டு வந்தனர். தனுரொக் உள்ளிட்ட சிலர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்படுவார்கள் என தெரிகிறது.

கைது செய்யப்பட்ட 9 பேரும் விசாரணைகளுக்கு உள்படுத்தப்பட்ட பின் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here