வடமாகாணசபை நிதியில் உருவான காரைநகர் பாரம்பரிய உணவகம் கொசி ரெஸ்ரோறன்ட் ஆனது!

பாரம்பரிய உணவகத்தை அப்போதைய முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் திறந்து வைத்தபோது

யாழ்ப்பாணம் காரைநகரில் அமைக்கப்பட்டிருந்த பாரம்பரிய உணவகத்தை யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் உணவகம் ஒன்றிற்கு வழங்கியுள்ளது பிரதேசசபை.

வடமாகாணசபையின் பதவிக்காலத்தில் உருவாக்கப்பட்ட கவனிக்கப்படத்தக்க திட்டங்களில் ஒன்று பாரம்பரிய உணவகங்கள். பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்யவும், பாரம்பரிய உணவுப்பழக்கவழக்கத்தை பேணவும் உருவாகக்ப்பட்ட இந்த திட்டம் எல்லா இடங்களிலும் பெரும் வரவேற்பை பெற்றது.

காரைநகர் கசூரினா கடற்கரையில் வடக்கு மாகாணசபையின் 11.43 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட பாரம்பரிய உணவகம், கடந்த வருடம் ஒக்ரோபர் 24ம் திகதி அப்போதைய வடக்கு முதலமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டிருந்தது.

அந்த உணவகம் கடந்த மூன்று தினங்களாக, யாழ் நகரிலுள்ள கொசி உணவகத்தின் பெயர் பலகையுடன் இயங்கி வருகிறது. மாகாண நிதியில், பாரம்பரிய உணவகத்திற்காக உருவாக்கப்பட்ட நிலையத்தில், கொசி உணவகம் இயங்கும் அனுமதியை காரைநகர் பிரதேசசபை வழங்கியதாக தெரிகிறது.

இதையடுத்து காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரிகள் இன்று அங்கு பரிசோதனை மேற்கொண்டனர். இதன்போது, முறையான அனுமதி பெற்று அந்த உணவகம் இயங்கவில்லையென்பது தெரிய வந்தது. முறையான நிர்வாக, சுகாதார அனுமதிகள் பெறாமலே புதிய உணவகம் இயங்கி வருகிறது.

இதையடுத்து, அந்த உணவகத்தின் மீது வழக்கு தொடர்வது பற்றி சுகாதார வைத்திய அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

கசூரினாவில் அதிக சுற்றுலா பயணிகள் வரும் இடத்தில் பாரம்பரிய உணவகத்தை நிர்வகிக்க முடியாமல் ஏன் இப்படியொரு முடிவை பிரதேசசபை எடுத்தது என்ற பலத்த அதிருப்தி எழுந்துள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here