திருட்டு விவகாரத்தில் சிக்கினார் ஐபிசி பாஸ்கரன்!

ஐ.பி.சி நிறுவனத்தின் உரிமையாளர் கந்தையா பாஸ்கரன் என்பவர் பங்குபற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில், முன்னாள் போராளிக்கு வாழ்வாதாரமாக வழங்கப்பட்ட பணத்தை கட்சியொன்றின் உறுப்பினர் திருடியதாக ஒளிபரப்பப்பட்டிருந்தது.

அந்த தகவல் உண்மையா, பொய்யா என்பதற்கு அப்பால், கந்தையா பாஸ்கரனின் ஊடக நிறுவனங்கள் செய்யும் பெரும் திருட்டை பற்றி வாசகர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அந்த ஊடக நிறுவனங்களின் உரிமையாளர் என்ற அடிப்படையில், அதன் வருவாயை பெற்றுக்கொள்பவர் என்ற ரீதியில், அந்த திருட்டை விட பெரும் திருட்டை ஐபிசி பாஸ்கரன் செய்து வருகிறார்.

தமிழ்பக்கத்தின் செய்திகள், விசேட கட்டுரைகளை க.பாஸ்கரனிற்கு சொந்தமான லங்காசிறி குழுக ஊடகங்கள் தினமும் திருடி வெளியிட்டபடியிருக்கின்றன. குறிப்பாக ஜேவிபி என்ற அவருக்கு சொந்தமான இணையத்தளம் இதில் முன்னிலையில் உள்ளது.

ஜேவிபி, தமிழ் வின் இணையங்களை அண்மையில் பெருந்தொகை பணத்தை கொடுத்து வாங்கிய பாஸ்கரன், அந்த இணையங்களின் நேரடி உரிமையாளர் என்பதன் அடிப்படையில் அந்த இணையங்களின் திருட்டு நடவடிக்கைக்கு நேரடி பொறுப்பாளியாவார். அந்த இணையங்களின் திருட்டு பற்றி தமிழ்பக்கம் நீண்டகாலமாக குறிப்பிட்டு வந்தது. தமிழ்பக்கம் மட்டுமல்ல, வேறுபல இணையங்களும் அதை குறிப்பிட்டு வந்தன.

ஜேவிபி இணையத்திற்கு பதிவேற்றும் சுவிஸ் வாழ், தமிழ் அரசு என்பவரே இந்த திருட்டில் ஈடுபடுவதாகவும், நிறுவனத்தால் அவர்களை ஒரேயடியாக கட்டுப்படுத்த முடியாதென்றும் பாஸ்கரனிற்கு நெருக்கமானவர்கள் ஏற்கனவே தமிழ்பக்கத்திடம் தெரிவித்திருந்தனர். எனினும், நீண்டகாலத்திற்கு ஒரு உரிமையாளர் கூறும் பதிலாக இது இருக்க முடியாது. அப்படி கூறுவாரானால், அவரும் அந்த திருட்டின் சூத்திரதாரியாகவே இருப்பார்.

லங்காசிறி குழுமம் பிரமாண்ட கட்டங்களை கட்டி, ஆளணியை உருவாக்கி வைத்திருந்தாலும், அதில் பணியாற்றுபவர்களின் தொழில் தேர்ச்சி குறித்த கேள்வியையும் இந்த திருட்டு விவகாரம் எழுப்புகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஒருமுறை, லங்காசிறி குழுமத்தை தமிழ்பக்கம் கொள்வனவு செய்து விட்டது என ஒரு செய்தி வெளியிட்டு, தமிழ் வின், ஜேவிபி இணையங்களின் திருட்டு ஸ்கிரீன்சொட்களை வெளியிட்டிருந்தோம். தற்போதுவரை தொடரும் திருட்டுக்கள் பற்றிய ஆவணங்கள் தமிழ்பக்கத்திடம் கைவசம் இருந்தாலும், அதை இப்போது பதிவேற்றவில்லை. காரணம், தமிழ்பக்கத்தின் செய்திகளை வகைதொகையின்றி திருடி வெளியிடுவதால் அவற்றை பதிவேற்றவில்லை.

தற்போது இறுதியாக தமிழ்பக்கம் வெளியிட்ட செய்தியொன்றை தலைப்பை கூட மாற்றாமல், ஜேவிபியின் சுவிஸ் பதிவேற்றுனர் தமிழ் அரசு என்பவர் திருடி வெளியிட்ட செய்தியின் ஸ்கிரீன் சொட் இணைக்கப்பட்டுள்ளது.

ஐபிசி, லங்காசிறி குழுமம் தேர்ச்சி மிக்க ஊடகவியலாளர்களை பணிக்கு அமர்த்தாமல், கொப்பி பேஸ்ற் செய்யும் தகுதியுடையவர்களை மட்டுமே பணிக்கு வைத்துள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here