கைதான மென்பொருள் பொறியியலாளர் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்!

சஹ்ரான் குழுவுடன் நெருக்கமான தொடர்பை பேணினார், தாக்குதலிற்கு ஒத்தாசையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கணினி மென்பொருள் பொறியியலாளரிடம் தொடர்ந்து விசாரணைகள் நடந்து வருகிறது.

கடந்த 27ம் திகதி இராணுவ புலனாய்வுத்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் இருந்து, 2014ஆம் ஆண்டு முதல் சமூக ஊடகங்கள் வழியாக இந்த சித்தாந்தத்தில் ஆர்வமுடையவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி வந்தது தெரிய வந்துள்ளது.

2015இன் நடுப்பகுதியில் துருக்கி சென்று வந்திருந்தார். பின்னர் தொடர்ச்சியாக விரிவுரைகள் நடத்தியுள்ளார். இல்ஹாம், ஜமீல், ஜலீல் உள்ளிட்டவர்கள் இதில் தொடர்ச்சியாக பங்குபற்றியுள்ளனர். இவர்களில் யாருடையதாவது வீடுகளில் விரிவுரைகள் நடந்தன.

பின்னர் இந்த குழுவினர் கல்முனைக்கு ஹூசைன் முபாரக்கின் திருமணத்திற்கு சென்றனர். அப்போது காத்தான்குடியில் சஹ்ரானை சந்தித்துள்ளனர்.

சஹ்ரான், அவரது சகோதரர் சைனி உள்ளிட்ட சிலர் கொழும்பில் கூடி தீவிர நிலைப்பாடுடைய குழுவொன்றை உருவாக்கி, உமையீர் என அழைக்கப்படுபவரிடம் தலைமை பதவியை வழங்கியுள்ளனர். அதே ஆண்டில் 500 டொலரை இல்ஹாம் இப்ராஹிமின் செப்பு தொழிற்சாலைக்கு சஹ்ரான் வழங்கியுள்ளார்.

பின்னர் கண்டி அருப்பொலவில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்ததாகவும், புத்தர் சிலைகள், வணக்கஸ்தலங்களை உடைக்க வேண்டுமென்றும், போர் நிலவரம் ஏற்பட்டால் மரணமடையவும் தயாராக இருக்க வேண்டுமென்றும் சஹ்ரான் தெரிவித்ததாக கூறியுள்ளார்.

அவர்களிற்கு தொடர்ந்து பயிற்சிகள், விரிவுரைகள் வழங்கியதாகவும், அதில் மேலும் சிலர் பங்குபற்றியதாகவும் அப்போது தெஹிவளை, கொச்சிக்கடை தற்கொலையாளிகளை சந்தித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதலை தொடர்ந்து அபு காலித் என்ற பெயரில் பேஸ்புக் கணக்கை பராமரித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here