சிறை மீண்டார் ஞானசார தேரர்!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த பொதுபலசேன அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் சற்று முன்னர் சிறையிலிருந்து விடுதலையானார்.

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் நேற்றே அவரது விடுதலைக்கான ஆவணத்தில் கையெழுத்திடப்பட்டபோதும், உரிய நிர்வாக நடவடிக்கைகளின் பின்னர் இன்று மாலையே விடுதலையானார்.

அவரை வரவேற்க சிறைச்சாலைக்கு முன்பாக பௌத்த பிக்குகளும், ஞானசார தேரரின் ஆதரவாளர்களும் திரண்டு வரவேற்பளித்தனர். பிரதான வாயிலில் கூட்டம் கூடியதால், பிறிதொரு வாயிலின் ஊடாக அவர் வெளியே அனுப்பப்பட்டார்.

கொட்டாவ ரக்மலகம விகாராதிபதியை சந்திக்க அவர் செல்வதாக கூறப்படுகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here