கன்னியாவில் பிள்ளையார் ஆலயம் உடைக்கப்பட்டு புத்தர் சிலை வைக்கப்படுகிறது!

கன்னியா வெந்நீரூற்று ஏழு கிணறுகள் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் பிள்ளையார் ஆலயத்தின் அத்திபாரம் உடைக்கப்பட்டு அந்த இடத்தில் புத்தர் சிலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புத்த பிக்கு ஒருவரின் தலைமையிலான சிலர் கடந்த ஒருவார காலமாக, இந்த சர்ச்சைக்குரிய கட்டுமானத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த இடம் தொல்பொருள் திணைக்களத்திற்குரிய இடம் என, அந்த திணைக்களம் அடையாளப்படுத்தியிருக்கும் நிலையில் அவ்விடத்தில் புத்தர் சிலை வைக்ப்பட்டது சரச்சையை தோற்றுவித்துள்ளது.

இந்த விவகாரம் மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், நேற்றுடன் புத்தர் சிலை வைக்கும் பணிகளை நிறுத்த உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். எனினும், இன்றும் பிள்ளையார் ஆலயத்தின் அத்திவாரம் உடைக்கப்பட்டு புத்தர் சிலை வைக்கும் பணிகள் தொடர்கிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here