ரஸல் பவுன்சரில் தாக்கப்பட்ட கவாஜா!

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, வரும் 30ம் திகதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதற்காக அங்கு சென்றுள்ள கிரிக்கெட் அணிகள் பயிற்சி ஆட்டங்களில் ஈடுபட்டுள்ளன. சவுதாம்டனில் நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணியும் மேற்கிந்தியத்தீவுகள் அணியும் மோதின.

இதில் அவுஸ்திரேலிய அணி ஆடிக் கொண்டிருந்தபோது, மேற்கிந்தியத்தீவுகள் அணியின் சகலதுறை வீரர் ஆந்த்ரே ரஸல் பந்துவீசினார். அவர் வீசிய பவுன்சர் பந்து, துடுப்பாட்ட முனையில் நின்ற உஸ்மான் கவாஜாவின் ஹெல்மெட்டை பதம் பார்த்தது. வலியால் துடித்த அவர், ஆட்டத்தை பாதியில் விட்டுவிட்டு வெளியேறினார்.

அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தனர். இதில் அவரது தாடையில் காயம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. அதற்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. “இது பெரிய காயமில்லை என்பதால் பயப்படவேண்டியதில்லை“ என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி தெரிவித்துள்ளது.

இந்தப் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here