துணை இராணுவக்குழு பேச்சுக்கள் பூர்த்தி: களத்தில் இறங்குகிறது கருணா குழு?

துணை இராணுவக்குழுக்களை மீண்டும் உருவாக்குவது பற்றிய செய்திகள் அண்மையில் அரசல்புரலாக வெளியாகியிருந்தது. எனினும், அது குறித்து தகவல்கள் பின்னர் சத்தமின்றி அடங்கி விட்டன.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களை தொடர்ந்து, தமிழ் துணை இராணுவக்குழுவை உருவாக்கும் உத்தியை பாதுகாப்பு தரப்பு மேற்கொள்வதாக செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும், எப்படியான துணை ஆயுதக்குழு என்பது குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கவில்லை.

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளிகளை துணைக்குழுவாக பயன்படுத்த முயற்சிக்கப்படுகிறதா, அல்லது ஏற்கனவே துணை இராணுவக்குழுக்களாக செயற்பட்ட கருணா, பிள்ளையான் குழுக்களை மீண்டும் தூசு தட்டி எடுக்க முயற்சிக்கப்படுகிறதா என்ற பரவலான கேள்வி எழுந்திருந்தது.

இப்பொழுது துணை இராணுவக்குழுக்கள் பற்றிய தகவல்கள் ஓரளவு வெளியாகியுள்ளன.

கருணாகுழுவுடன் இது குறித்த பேச்சுக்கள் நடந்து, கிட்டத்தட்ட துணை ஆயுதக்குழு விவகாரம் பூர்த்தியாகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்று இடங்களில், மூன்று சுற்று பேச்சுக்கள் நடந்து, இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருவதாக தெரிகிறது.

தனியே துணை இராணுவக்குழுவாக மட்டுமல்லாமல், பாதுகாப்புத்துறையுடன் தொடர்பபட்ட ஒரு பிரமுகரின் அரசியல் பணிகளிலும் ஈடுபடுத்தப்படவுள்ளது இந்த துணைக்குழு.

வாசகர் கவனத்திற்கு- தமிழ் பக்கத்தில் வெளியான இந்த செய்தி உள்ளிட்ட பெரும்பாலான செய்திகளை லங்காசிறி குழுமத்தின் ஐ.பிசி, தமிழ்வின், ஜேவிபி இணையங்கள் திருடி வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here