யாழ் விடுதியில் ஆவா குழு உறுப்பினரின் பிறந்ததின கொண்டாட்டம்: பொலிஸ் சுற்றிவளைப்பில் தப்பிய முக்கிய புள்ளிகள்!

யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியிலுள்ள தனியார் விடுதியில் ஆவா குழு ரௌடிகள் ஒன்று கூடியுள்ளனர் என கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிசார் அங்கு விசேட சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

இதன்போது, வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையதாக கருதப்படும் சில ரௌடிகள் தப்பி சென்றுவிட்டனர். அவர்களின் நண்பர்களான இளைஞர்களை பொலிசார் விசாரணைக்குட்படுத்தினர். அவர்களில் 5 பேரை மேலதிக விசாரணைக்காக யாழ் பொலிஸ் நிலையம் அழைத்து சென்றுள்ளனர்.

ஆவா குழு ரௌடியென கருதப்படும் மனோஜ் என்பவரின் பிறந்தினத்திற்காக 50 இளைஞர்கள் ஒன்றுகூடியுள்ளனர் என பொலிஸ் புலனாய்வு பிரிவிற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பொலிசார் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டபோது, பிரதான சந்தேகநபர்கள் பின்மதில் பாய்ந்து தப்பிச் சென்று விட்டனர்.

அவர்களின் மோட்டார்சைக்கிள்கள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டது.

அங்கிருந்த 30 பேர் வரையானவர்களிடம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர். அதில் 5 பேரை பொலிஸ் நிலையம் அழைத்து சென்று மேலதிக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here