‘சமாதானத்தின் தசாப்த நிறைவு தினம்’: கிளிநொச்சி, கொழும்பில் பிரமாண்ட இராணுவ அணிவகுப்பு!

சமாதானத்தின் தசாப்த நிறைவு தினம் என்ற தொனிப்பொருளில் இராணுவத்தின் பிரமாண்ட அணி வகுப்புக்கள் இன்று இடம்பெற்றன. யுத்தம் முடிவுக்கு வந்ததை நினைவுகூரும் விதமாக நடைபெறும் இராணுவ நிகழ்வுகளின் இறுதிநாள் நிகழ்வாக இந்த அணிவகுப்புக்கள் இடம்பெற்றன.

கிளிநொச்சியில் இராணுவ கட்டளை தலைமையகத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 8 மணிக்கு ஏ9 வீதியில் பிரமாண்ட அணிவகுப்பு இடம்பெற்றது. கரடிப்போக்கு சந்தியில் இருந்து டிப்போ சந்தி வரை இந்த பிரமாண்ட அணிவகுப்பு இடம்பெற்றது.

கிளிநொச்சி கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய தலைமையில் ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் அணிவகுத்து சென்றனர்.

இதன்போது வீதியின் இரு மருங்கிலும் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது.

இதேவேளை, கொழும்பிலும் பிரமாண்ட அணிவகுப்பு  இடம்பெற்றது. மேற்கு பிராந்திய கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே தலைமையில் ஆயிரக்கணக்கான படையினர் அணிவகுத்து சென்றனர்.

மஹரகமவில் உள்ள ஜனாதிபதி கல்லூரியில் இருந்து  பன்னிப்பிட்டிய தர்மபால கல்லூரி வரை இந்த அணிவகுப்பு இடம்பெற்றது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here