ரிசாட் மீதான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு நாளை திகதி தீர்மானிக்கப்படும்: கூட்டமைப்பு எம்.பியும் ஆதரவு!

அமைச்சர் ரிசாட் பதியுதீன் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் திகதியை நாளை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார் சபாநாயகர் கரு ஜயசூரிய.

ரிசாட் பதியுதீன் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையை உடனடியாக விவாதத்திற்கு எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இன்றைய அமர்வு ஆரம்பித்ததும் ஆரம்பத்தில் கேள்வி பதில் இடம்பெற்றது. பின்னர் ரிசாட் விவகாரமே பேசப்பட்டது.

நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டு, விசாரணை முடிவைப் பொறுத்து செயற்படலாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டால், தன் மீதான குற்றச்சாட்டுக்களிற்கு அமைச்சர் பதிலளிக்க வாய்ப்பாக அமையும். அதனால் இரண்டு நாள் விவாதத்திற்கு திகதி ஒதுக்குவது அவசியம் என எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை முதலில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டுமென ஜேவிபி வலியுறுத்தியது.

கூட்டமைப்பின் சாள்ஸ் நிர்மலநாதன் எம்.பி, ரிசாட் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை முதலில் விவாதத்திற்கு எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தினார்.

இதையடுத்து, நாளை கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ரிசாட் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையின் திகதி தீர்மானிக்கப்படுமென கூறி, நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தார் சபாநாயகர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here