மன்னாரில் போதைப்பொருளுடன் பெண் கைது!

மன்னார் சௌத்பார் புகையிரத வீதி பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (21) இரவு இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இரகசிய தகவல் ஒன்றையடுத்து பொலிசார் இவர்களை வளைத்துப் பிடித்தனர். கைதானவர்களில் ஒருவர் பெண். 923 கிராம் ஐஸ் போதைப்பொருள் இவர்களிடம் மீட்கப்பட்டது.

கைதானவர்கள் தலைமன்னார் பகுதியை சேர்ந்தவர்கள். தற்போது மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here