பேசாலையில் அஞ்சலி நிகழ்வு!

பேசாலை வாடைக்காற்று நண்பர்கள் வட்டத்தினால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கான 31ம் நாள் நினைவஞ்சலி நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுசரிக்கப்பட்டது.

நேற்று மாலை பேசாலை சாரணர் சந்தியில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

கறுப்பு வெள்ளை நிறங்களினால் சோடினைகள் மேற்கொள்ளப்பட்டு 500 க்கும் மேற்பட்ட பேசாலை கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர். உயிரிழந்த மக்களுக்காக மெழுவர்த்தி ஏந்தி அக வணக்கத்தை செலுத்தியதுடன்,  ஆத்மசாந்திக்காக வழிபாட்டிலும் ஈடுபட்டனர்.

அமைதியாக இடம்பெற்ற இந் நிகழ்வில் பேசாலை கிராம மக்களுடன் சட்டத்தரணி பிறீமுஸ் சிராய்வா, பேசாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பேசாலை இராணுவ பொறுப்பதிகாரி, பேசாலை வைத்தியசாலை பொறுப்பதிகாரி, இந்துசமய குருவானவர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here