கடும் காற்று, மழையினால் 7 வீடுகள் சேதம்

வவுனியாவில் கடும் காற்றின் காரணமாக 7 வீடுகள் பாதிப்படைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

நேற்று திடீரென வீசிய கடும் காற்றுடன் மழை பெய்துள்ளது இதனையடுத்து சுழல் காற்று வீசியதை அடுத்து வீடுகளின் மேல் போடப்பட்டிருந்த கூரைகள் தூக்கி வீசப்பட்டுள்ளன.

இதனால் ஆறுமுகத்தான்புதுக்குளம், மரையடித்தகுளம், ஓமந்தை ஆகிய பகுதிகளில் 7 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மரையடித்தகுளத்தில் மின் கம்பங்களுக்கு மேல் மரம் முறிந்து வீழ்ந்ததால் மின் கம்பங்கள் உடைந்து மின்சாரமும் தடைப்பட்டுள்ளது.

இதேவேளை ஆறுமுகத்தான்புதுக்குளத்தில் வீடு உடைந்து வீழ்ந்ததில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் ஆலயமும் சேதமடைந்துள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here