UPDATE: ஜனக பெரேரா கொலை வழக்கு; புலிகளால் வழங்கப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்த உத்தரவு!

அநுராதபுரத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தி முன்னாள் வடமத்திய மாகாண எதிர்க்கட்சி தலைவர் ஜனக பெரேராவை கொலை செய்த குற்றச்சாட்டில் ஒருவருக்கு நேற்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

வழக்கின் இரண்டாவது எதிரியான மதவாச்சி சியம்பலகசகாடவவை சேர்ந்த மொஹம்மட் உமர் ஹபதாப் என்பவருக்கே நேற்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அநுராதபுரம் சிறப்பு மேல் நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியது.

1,2,3வது குற்றச்சாட்டுக்களிற்காக தனித்தனியாக 20 வருட கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் புலிகளால் அவருக்கு வழங்கப்பட்ட பெறுமதியான சொத்துக்களை பறிமுதல் செய்து அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் சுவிஸ் தயாரிப்பான கடிகாரம் ஒன்றும் அடக்கம்.

இந்த வழக்கின் முதல் எதிரியான சண்முகநாதன் சுதர்சன் குற்றத்தை ஏற்றுக்கொண்டதையடுத்து, 2014 இல் அவருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here