திமுத் அரைச்சதம்!

இலங்கை ஒருநாள் அணிக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திமுத் கருணாரத்ன, 4 வருடங்களின் பின்னர் இன்று ஒருநாள் போட்டியில் களமிறங்கினார். துடுப்பாட்டத்தில் கலக்கி, இரண்டாவது சர்வதேச அரைச்சதத்தையும் அடித்தார்.

இலங்கை டெஸ்ட் அணி தலைவர் கருணாரத்ன, 4 வருடங்களின் முன்னரே கடைசியாக ஒருநாள் போட்டியொன்றில் ஆடினார். அவரது டெஸ்ட் பாணி மெதுவான ஆட்டம் ஒருநாள் போட்டிக்கு சரிவராது என்பதால், அவர் ஒருநாள் அணியிலிருந்து கழற்றி விடப்பட்டிருந்தார்.

இதுவரை 16 ஒருநாள் போட்டிகளில் ஆடி ஒரேயொரு அரைச்சதத்துடன் அதிகபட்ச ஓட்டம் 60 என்ற கணக்கை வைத்திருந்தார். இந்த ஓட்டம் ஸ்கொட்லாந்திற்கு எதிராக எடின்பரோ மைதானத்தில் 2011இல் பெற்றது. 2015ஆம் ஆண்டின் பின் ஒருநாள் போட்டிகளில் அவர் ஆடிதில்லை.

இந்தநிலையில் இலங்கையின் புதிய ஒருநாள் கப்டனாக திமுத் நியமிக்கப்பட்டிருந்தார். அவரது நியமனம் விமர்சனங்களை கிளப்பிய நிலையில், ஸ்கொட்லாந்துடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை இன்று ஆடி வருகிறது. முதலில் களமிறங்கிய இலங்கையின் ஆரம்ப துடுப்பாட்ட ஜோடியாக கருணாரத்ன, அவிஷ்க களமிறங்கினார்கள். இருவரும் அரைச்சதம் அடித்தார்கள். திமுத் தனது அதிகபட்ச ஓட்டமாக 77 ஓட்டங்களை பெற்றார்.

இலங்கையணி 8 விக்கெட் இழப்பிற்கு 322 ஓட்டங்களை பெற்றது. பதிலளித்து ஆடிவரும் ஸ்கொட்லாந்த 3 விக்கெட் இழப்பிற்கு 116 ஓட்டங்களை எடுத்து 24.3 ஓவர்களில் ஆடி வருகிறது.

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here