அவுஸ்திரேலிய தேர்தல் முடிவின் எதிரொலி: மனுஸ் தீவில் தற்கொலை முயற்சிகள்!

அவுஸ்திரேலிய தேர்தலில் லிபரல் கூட்டணி வெற்றிபெற்ற செய்தி வெளியான பின்னர் மனுஸ் தீவில் ஆறு அகதிகள் தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர்.

தேர்தலில் லேபர் கட்சி வெற்றிபெற்றால் அகதிகளிற்கு சார்பான நிலைப்பாட்டை எடுக்கும் என்ற பரவலான எதிர்பார்ப்பு இருந்தது. மனுஸ் – நவுறு தீவில் தங்க வைக்கப்பட்டிருந்த அகதிகள் தேர்தல் முடிவை மிக ஆவலுடன் எதிர்நோக்கியிருந்தனர். எனினும், தேர்தல் முடிவு தலைகீழாக வெளியானதில் அகதிகள் மனமுடைந்து போயுள்ளார்கள் என்று அங்கிருந்து அகதிகள் சார்பில் பேசியவர்கள் கூறியுள்ளார்கள்.

லேபர் கட்சி ஆட்சியைக் கைப்பற்றினால் தங்களை அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்காவிட்டாலும், அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தும், 150 அகதிகளை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துவரும் நியூஸிலாந்து அரசின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் என்று எதிர்பார்த்திருந்த மனுஸ் – நவுறு தீவு அகதிகள், மொரிசன் அரசின் வெற்றியினால் மிகுந்த விரக்தியடைந்துள்ளனர்.

அகதிகளின் குரலாக சமூக ஊடகங்களில் ஒலித்துக் கொண்டிருக்கும் அப்துல் அஸிஸ் அடம், அகதிகளின் தற்கொலை முயற்சிகள் குறித்து உடனுக்குடன் வெளியுலகத்திற்கு அறியத் தந்து கொண்டிருக்கிறார். நம்பிக்கை நொறுங்கியுள்ள அகதிகளின் மீது உலகின் மனிதாபிமானம் திரும்ப வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here