இந்தோனேசிய தேர்தலில் பதவியை தக்க வைத்த விடோடோ!

இந்தோனேசிய ஜனாதிபதி தேர்தலில் ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றிபெற்று தனது பதவியை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

இந்தோனேசியாவில், ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் கடந்த மாதம் 17ம் திகதி நடைபெற்றது. வார கணக்கில் நீடித்த வாக்கு எண்ணும் பணி முடிவடைந்ததையடுத்து, ஜோகோ விடோடா வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது.

விடோடோவிற்கு 55.5 வீத வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி, ஜெனரல் பிரபாவோ சுபியாந்தோவிற்கு 44.5 வீத வாக்குகளும் கிடைத்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

முன்னதாக, தேர்தலில் மோசடி நடவடிக்கைகள் அதிகம் இடம்பெற்றதாக பிரபாவோ குற்றஞ்சாட்டியிருந்தார். அதன் காரணமாக, அவர் தேர்தல் முடிவுகளை எதிர்த்து மேல்முறையீடு செய்யக்கூடும் என்றும் அவருடைய ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், பிரபாவோவும் அவருடைய ஆதரவாளர்களும் அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான உடனடி அறிகுறி ஏதும் தென்படவில்லை.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here