இலங்கைத்தமிழர் பிரச்சனையை பின்னணியாக கொண்ட ‘சினம் கொள்’!

இலங்கையில் நடந்த இறுதி யுத்தம், இலங்கை தமிழர்களின் பிரச்சினையை மையமாக வைத்து பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அந்த வரிசையில் வருகிறது சினம்கொள் என்ற படம். இலங்கை தமிழ் கலைஞர்களும், சிங்கள கலைஞர்களும் இணைந்து இதனை உருவாக்கி இருக்கிறார்கள்.

இதுபற்றி இயக்குனர் ரஞ்சித் ஜோசப் கூறியதாவது:

போருக்குப் பிறகான காலத்தில் இலங்கையில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி இந்த படம் பேசுகிறது. 6 வருடங்கள் சிறை தண்டனை முடிந்து வெளியே வருகிறார் கதையின் நாயகன். அவரது வீடு இலங்கை ராணுவத்தால் கைப்பற்றப்பட்டதை காண்கிறார். மேலும் அவரது குடும்பத்தினர் காணாமல் போயிருக்கிறார்கள் அதன் பிறகு அவர் என்ன ஆகிறார் என்பதுதான் படத்தின் கதை. இலங்கை தமிழர்கள் எதிர்கொள்ளும் சில கடினமான, யதார்த்தமான விஷயங்களையும் பேசியிருக்கிறது.

இலங்கையில் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு போன்ற இடங்களில் படம்பிடிக்க நாங்கள் முடிவு செய்தோம். அப்போது தான் ரசிகர்கள் அந்த தளத்திற்கு நெருக்கமாக அனுபவத்தை உணர முடியும் என நினைத்தோம். 78 பேர் கொண்ட மொத்த படக்குழுவும் இந்த படத்தின் படப்பிடிப்புக்காக இலங்கைக்கு சென்றோம். தொழில்நுட்ப கலைஞர்கள் சிங்களர்களாக இருந்தனர்.

படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருந்தனர். இத்தகைய விஷயங்கள் இந்த படத்திற்கு ஒரு உண்மையான வரம். ஐரோப்பா, கனடா மற்றும் தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் வாழும் இலங்கை தமிழர்கள் இந்த படத்துக்கு நிதி அளித்துள்ளனர் என்கிறார் ரஞ்சித் ஜோசப்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here