ஜோகோவிச்சை வீழ்த்தி கிண்ணம் வென்றார் நடால்!

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் கோப்பை வென்றார். இறுதிப் போட்டியில் செர்பியாவின் ஜோகோவிச்சை வீழ்த்தினார்.

ரோம் நகரில் இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதியாட்டத்தில் நம்பர்1வீரரான செர்பியாவின் ஜோகோவிச், தரவரிசையில் 2வது இடத்திலுள்ள ஸ்பெயினின் நடாலை எதிர் கொண்டார். முதல் செட்டை 6-0 என எளிதாக கைப்பற்றிய நடால், அடுத்த செட்டை 4-6 என போராடி பறிகொடுத்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி செட்டில் அசத்திய இவர் 6-1 என தனதாக்கினார். இரண்டு மணி நேரம் 25 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில், நடால் 6-0, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

இதன் மூலம், களிமண் களத்தில் மீண்டும்“கிங்“ என நிரூபித்துள்ளார். இது, இத்தொடரில் நடால் வென்ற 9வது சம்பியன் பட்டம். அதிக முறை இத்தாலி ஓபனில் கோப்பை வென்ற வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறார்

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here