நெஞ்சையுருக்கும் அந்த புகைப்படம் நினைவிலிருக்கிறதா?: அந்த சிறுமிதான் இன்று பொதுச்சுடர் ஏற்றினார்!


முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் பேரெழுச்சியுடன் நடந்து கொண்டிருக்கின்றன.

நினைவேந்தலிற்கு தடையிருக்காதென பாதுகாப்பு தரப்பு அறிவித்தலை போலவே, நிகழ்வு மிக அமைதியாக நடந்து கொண்டிருக்கிறது.

நினைவேந்தலில் பொதுச்சுடரை மாணவியொருவர் ஏற்றினார். அவரின் பின்னால் துயரமாக கதையொன்று இருக்கிறது.

யுத்தத்தின் இறுதிநாட்களில் வெளியான புகைப்படங்களில் ஒன்று- தாயொருவர் உயிரிழந்திருக்க, அதை அறியாத சிறுமியொருவர் தாயில் பால் பருக முயல்வதை போன்ற புகைப்படம். மனதை உருக்கும் அந்த புகைப்படம் இலங்கை யுத்தத்தில் எடுக்கப்பட்டதல்ல. எனினும் இலங்கை யுத்தத்தில் எடுக்கப்பட்டதாகவே சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

எனினும், அந்த புகைப்படத்தை போன்ற சம்பவமொன்றிற்கு உரிய சிறுமியே இன்று பொதுச்சுடரை ஏற்றினார்.

முள்ளியவளையை சேர்ந்த ஞானசீலன் றாகினி என்ற சிறுமியே பொதுச்சுடரை ஏற்றினார்.

அந்த சிறுமி தாயிடம் பால் அருந்திக் கொண்டிருந்தபோது, தாயின் முதுகுப்புறமாக தாக்கிய குண்டுச்சிதறல், தாயின் மார்பொன்றை அறுத்துக்கொண்டு, அதை பற்றியிருந்த சிறுமியின் இடது முழங்கையையும் அறுத்துக் கொண்டு சென்றது.

இன்றைய நிகழ்வில் வடக்கு முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், மாவை சேனாதிராசா, த.சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ் மாநகரசபை மேயர் இ.ஆனோல்ட் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here