வாகரை, கிரானில் புதிய முஸ்லிம் குடியேற்றங்கள் உருவாக்க இரகசிய முயற்சி!


கோறளைப்பற்று வடக்கு வாகரை மற்றும் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக பிரிவுகளில் முஸ்லிம் மக்களை குடியேற்றும் கோரிக்கைகள் அடங்கிய ஆவணம் ஜனாதிபதி அபிவிருத்தி செயலணிக்கு, அமைச்சர் அமீர் அலி மூலமாக சமர்ப்பிக்கப்பட்டு மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்பக்கம் அறிந்தது.

முஸ்லிம் விவசாயிகள் சேனை பயிர் செய்கை மற்றும் கால் நடை வளர்ப்புக்காக அரச காணிகளில் மூன்று அல்லது நான்கு மாதங்கள் சென்று வந்த அரச நிலப்பகுதிகளே இவ்வாறு அவர்களிற்கு வழங்கப்படவுள்ளது. இது அவர்கள் பரம்பரையாக வாழ்ந்து வந்த பகுதிகள் அல்ல.

அத்துடன் விவசாய நடவடிக்கைகளுக்காக அரசாங்க உர மானியங்களை பெறும் போது தமிழ் பகுதி கமநல அமைப்புகளில் பெயர்களை பதிந்து அதன் மூலம் குறித்த உர மானியங்களைப் பெற்றுக் கொண்ட ஆவணங்களை வைத்துக்கொண்டு தற்போது குறித்த நிலப்பகுதியினை உரிமை கோரும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நீண்ட நாள் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் அமைச்சு றிசாட் பதியுதீன் அமைச்சரகவுள்ளதனால் அதனை சாதகமாக வைத்து அமீர் அலி குறித்த கோரிக்கைகள் அடங்கிய ஆவணங்களுக்கு அனுமதிகள் கோரப்பட்டுள்ளது.

வாகரை பிரதேசத்தை பொறுத்த வரை விவசாய நடவடிக்கைக்காக கால் நடை மற்றும் காட்டு தொழில் மற்றும் குறித்த பகுதிக்கு வியாபாரத்திற்கு சென்ற வேளைகளில் தமிழர்களின் விவசாய நிலங்களை ஆயத்துக்கு எடுத்து மூன்று நான்கு மாதம் விவசாயம் செய்த காணிகளும் தமிழர்களின் சேனைகளில் முஸ்லிம்கள் காவல் காரர்களாக போய் குறிப்பிட்ட மாரிகாலத்தில் வேலை செய்து வந்த காணி களுக்கும் தற்போது காணி ஆவணம் மோசடியாக பெறப்பட்டும் ஆதாரம் அற்ற ஆவணங்களை வைத்து சில தமிழ் பேசும் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் குறித்த செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் கிரான் பிரதேசத்தில் பல அரச காணிகள் மற்றும் தமிழ் பகுதி காணிகள் ஆட்சி உறுதி மற்றும் போலி ஆவணங்கள் தயாரித்து அவை முன்னர் பதவிகளில் இருந்த அதிகாரிகளின் செல்வாக்கில் போலிகள் மறைக்கப்பட்டு தற்போது காணி களுக்கான அனுமதி மற்றும் குடியேற்றம் மேற் கொள்ள ஏற்பாடுகள் நடை பெற்று வருகின்றது. இதன் மூலம் பல தமிழ் பிரதேச எல்லை கிராமங்கள் முஸ்லிம் குடியேற்றத்திற்குள் உள்வாங்கப்படவுள்ளது.

ஜனாதிபதி அபிவிருத்தி செயலணி மற்றும் பிரதமரின் வடக்கு கிழக்கு அபிவிருத்தி செயலணி ஆகியவற்றில் அங்கத்தவராக பதவிகளை அலங்கரிக்கும் கிழக்கு மாகாண தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களின் காதுகளுக்கு அனைத்தும் நடந்து முடிந்துள்ள இந்த குடியேற்ற திட்டம் பற்றி தெரியாமல் போனதன் மர்மம் என்ன?

வாசகர் கவனத்திற்கு- விழிப்பு உள்ளிட்ட பல இணையத்தளங்கள் இந்த செய்தியை கொப்பி செய்து பிரசுரித்துள்ளன. விழிப்பு இணையம் தமிழ் பக்கத்தின் செய்திகளையே கொப்பி செய்து பிரசுரிக்கிறது. நேரடியாக தமிழ்பக்கத்திற்கு வந்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here