ஜனாதிபதியும், பிரதமரும் வேறுவேறு கட்சியென்பதாலேயே சிக்கல்!

இந்த நாட்டில் ஜனாதிபதியும் பிரதமரும் வெவ்வேறு கட்சிகளில் பிரதிநிதித்துவப் படுத்துவதால் ஆட்சி நடத்துவதில் பல்வேறு முரண்பாடுகள் நிலவுகின்றது.

இதேபோன்று முன்னால் ஜனாதிபதி திருமதி சந்திரிக்கா குமாரதுங்க ஆட்சி நடாத்திய காலத்தில் ஜனாதிபதியாக திருமதி சந்திரிக்கா குமாரதுங்கவும் பிதமராக ரணில் விக்கிரமசிங்கவும் இருந்த வேளையில் இரண்டு வருடங்களில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடை பெற்றது.

இதே போன்று இரண்டு கட்சிகளை சேர்ந்தவர்கள் ஆட்சியமைக்க கூடாது. ஒரேக்கட்சியை சேர்ந்தவர்களே ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் இருக்க வேண்டும். எனவே எதிர் வரும் தேர்தல்களில் பொது மக்கள் ஒரேகட்சியை சேர்ந்த வர்களை ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் தெரிவு செய்ய வாக்களிக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், விசேட அபிவிருத்தி அமைச்சருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் 20 இலட்சம் ரூபா செலவில் புதிதாக அமைக்கப்படவிருக்கும் மக்கள் பார்வை அரங்கம் அமைப்பதற்கான அடிக்கல்லை அமைச்சர் இன்று நாட்டி வைத்தார்.

கல்லூரி அதிபர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இவ் வைபவத்தில் கல்லூரியின் பழைய மாணவரும் நுவரெலியா மாநகரசபை உறுப்பினருமான ஆர். கேதீஸ், நுவரெலியா வலய கல்வி அதிகாரி எம்.மோகன்ராஜ் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

இவ் அடிக்கல் நாட்டு வைபவத்தை தொடர்ந்து ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சசர் இராதாகிருஷ்ணன் கருத்து தெரிவிக்கையில்,

இந்த நாட்டில் ஒரேகட்சியை சேர்ந்த ஜனாதிபதியும், பிரதமரும் இல்லாததால் ஆட்சியில் ஒன்றுக்கொன்று கருத்து முரண்பாடுகள் அடிக்கடி ஏற்படுகின்றது.

இரண்டு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் ஆட்சி நடத்துவதால் இருவருக்கிடையில் வேறுப்பட்ட கருத்துக்களை கூறுகின்றனர். இதனால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. ஒற்றுமையின்மை தோன்றுகின்றது. நாட்டின் அபிவிருத்தியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதத்தில் இந்நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைக்கும் இவர்கள் இருவரும் வெவ்வேறுபட்ட கருத்துக்களை கூறுகின்றனர். எனவே இந்த நாட்டின் சமூக பொருளாதார அபிவிருத்திகளை அபிவிருத்தி செய்யவும் சமூகங்களுக் கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தவும் எதிர்வரும் தேர்தல்களில் ஒரே கட்சியை சேர்ந்தவர்களை தெரிவு செய்ய மக்கள் வாக்களிக்க வேண்டும் என கூறினார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here