வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் ஆலய தேர் திருவிழா

வவுனியா – குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் இரதோற்சவம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

பக்தர்கள் சூழ இன்று (17) அதிகாலை முதல் கிரியைகள் இடம்பெற்று காலை 7.30 மணியளவில் வசந்தமண்டப பூஜை நடைபெற்றது.

இதனை தொடர்ந்து காளிகாம்பாள் உள்வீதி வலம் வந்து தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதன்போது, அடியார்கள் அங்கபிரதட்சினை , காவடிகள் மற்றும் கற்பூர சட்டி என்பவற்றை ஏந்தி தங்களது நேர்த்திகடன்களை செலுத்தினர்.

இதேவேளை, காலை பத்துமணியளவில் தேர் இருப்பிடத்தை வந்தடைந்ததை தொடர்ந்து அர்ச்சனை இடம்பெற்றது.

முழுமையான புகைப்படத் தொகுப்பை பார்க்க இங்கு அழுத்தவும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here