வலி. மேற்கு பிரதேச சபையில் அஞ்சலி


முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் மெழுகுவர்த்தி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. வலி.மேற்கு பிரதேச சபையின் 15 ஆவது சாதாரண கூட்டம் இன்று (17) இடம்பெற்றபோதே உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

மேற்படிக் கூட்டம் தவிசாளர் த.நடனேந்திரன் தலைமையில் இன்று காலை 9.00 மணிக்கு இடம்பெற்றது. இதன்போது, உறுப்பினர் ந.பொன்ராசா கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட எமது உறவுகளின் 10 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர் தாயகம் எங்கும் இடம்பெற்று வருகின்றது. நாளை பிரதான நிகழ்வு முள்ளிவாய்க்காலில் இடம்பெறவுள்ளது.

மேலும், கடந்த 21 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களில் 300 வரையான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சபையில் மெழுகுவர்த்தி சுடர் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என தவிசாளரிடம் கோரிக்கை விடுத்தார்.
தவிசாளரும் உறுப்பினர்களும் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டனர். அனைவரும் இணைந்து தமது கைகளில் மெழுகுவர்த்தி சுடர் ஏந்தி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here