உபதவிசாளர் அடி முட்டாள்; எனது உயிருக்கு ஆபத்தெனில் அவர்தான் காரணம்: காரைதீவு தவிசாளர்!

அனைத்து முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் என்று எந்தச் சந்தர்ப்பத்திலும் சொல்லவில்லையென காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்துள்ளார்.

தனது முன்னைய கருத்தை, கரைதீவு உபதவிசாளர் முட்டாள்தனமாக
திரித்து கூறியுள்ளதாகவும், தனது உயிருக்கு எஏதேனும் ஆபத்து நேருமென்றால் உபதவிசாளர்தான் காரணமென்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

நாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முஸ்லிம்களின் பெயரை வைத்துக் கொண்ட ஒரு பயங்கரவாதக் குழுவினர் நடாத்திய மிலேச்சத்தனமான கொடூரச்செயலுக்கு அனைத்து முஸ்லிம் மக்களையும் குற்றம் சாட்ட முடியாது. யாரும் அப்படிக் குற்றம் சுமத்தவும் இல்லை. நானும் எந்தச் சந்தர்ப்பத்திலும் அனைத்து முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் என்று சொல்லவுமில்லை. அரசியலுக்காக உபதவிசாளர் அடிமட்டமான தனிப்பட்ட கருத்துக்களை எனக்கெதிராகத் தெரிவித்துள்ளமை அவரொரு அடிமட்ட முட்டாள் என்பதை கூற விரும்புகின்றேன்.

அண்மையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத் தொடரில் 300இற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டார்கள். ஆனால் இதுவரை எந்தச் சந்தர்ப்பத்திலும் அம்மக்கள் யாருக்கும் தீங்கிழைக்கவில்லையென்பதை சம்பந்தப்பட்டவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். இனவாதம் மதவாதம் பேசி நிம்மதியாக வாழ்ந்த சரித்திரம் உண்டா என்பதை கேட்க விரும்புகின்றேன்.

ஒருவரது எதிர்ப்பறிக்கை என்பது நாகரீகமாக கருத்துக்கு மறுதலித்து மறுகருத்து சொல்லப்பட வேண்டுமே தவிர தனிப்பட்ட ரீதியில் யாரும் யாரையும் தாக்குவதென்பது அவரவர் பண்பு தகுதி தராதரங்களை வெளிக்காட்டும். அரசியலுக்காக உபதவிசாளர் அடிமட்டமான தனிப்பட்ட கருத்துக்களை எனக்கெதிராகத் தெரிவித்துள்ளமை அரசியலுக்காக ஒற்றுமையாக வாழும் தமிழ் முஸ்லிம் மக்களைப் பிரித்து இலாபமடைய முயற்சிக்கும் ஒரு சதியாகவே இதனைப் பார்க்கிறேன்.

எனவே இவர் அரசியலுக்காகப் பேசும் இப்பொய்களுக்கு பின்னால் எனது இனிய இஸ்லாமிய சகோதரர்கள் துணைபோக மாட்டார்களென்பதை நான் நன்கு அறிவேன். காரைதீவு 3 ஊர்களின் மத்தியிலிருப்பதால் தான் பாதுகாப்பு என்று சொல்வதற்கு இவர் யார்? பயங்கரவாதிகளுக்கும் பேரினவாதக்கட்சியின் முகவரான இவருக்கும் தொடர்புள்ளதா? எனச் சந்தேகிக் கவேண்டியுள்ளது. பல்வேறு வழிகளில் எனக்கு அவர் கடந்தக்காலங்களில் அச்சுறுத்தல் விடுத்து வந்திருக்கிறார். எனவே எனது உயிருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் இவரே பொறுப்பாளராவார் என்பதை இங்கு பகிரங்கமாகத் தெரிவிக்கிறேன்.

நான் அரிசி பருப்பு கொடுத்து உறுப்பினராகவில்லை. வேலை பெற்றுத் தருகிறேன் எனக் கூறி பல மக்களிடம் இலஞ்சம்பெற்று ஏமாற்று வேலைகளில் திரியவில்லை. அதற்கு சிலர் துணை போகின்றனர் என குறிப்பிட்டார். மேலும் எமது சபையிலும் உப தவிசாளர் இதுவரை காலமும் அனைத்திற்கும் முட்டுக்கட்டையாகவே இருந்து வந்துள்ளார். எதனையும் இனவாத நோக்கில் பாக்கும் மோசமான பேர்வழியாகவுள்ளார். அவதூறான வார்த்தைகளை சபையிலே பேசுவார்.

எமது சபையில் இரு இனங்களும் உள்ளன. எம்முடன் உள்ள 5 முஸ்லிம் சகோதரர்களோடு நாம் சகோதரமாக பாசத்தோடு பழகிவருகிறோம். இவரைத் தவிர ஏனையோர் நன்றாக சகோதரமாகப் பழகுகின்றனர். இனியாவது அவர் இனவாதத்தை கைவிட்டு ஒற்றுமையாக வாழவேண்டும் என்றார்.எனவே இனிமேலாவது தேவையில்லாமல் மூக்கை நுழைப்பதைவிடுத்து நேர்மையான அரசியல்வாதியாக இருக்கப் பழக வேண்டும். அரசியலுக்காக மக்களைப் பிரிக்க தலைப்படக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here